Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி... தெ. ஆப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட்டில் அஸ்வின் ஆடுகிறார்!

மொஹாலி: தென் ஆப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பங்கேற்பார் என்று இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி தகவல் வெளியிட்டுள்ளார்.

அஸ்வின் முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், முழு தகுதியுடன் அவர் இருப்பதாகவும், முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருப்பதாகவும் சாஸ்திரி கூறியுள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் ஒரு நாள் போட்டியில் காயம்

முதல் ஒரு நாள் போட்டியில் காயம்

அஸ்வின், கான்பூரில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியின்போது காயமடைந்தார். இதனால் அவரால் மீதமுள்ள 4 ஒரு நாள் போட்டிகளிலும் பங்கேற்க முடியாமல் போய் விட்டது.

பெரும் பாதிப்பு

பெரும் பாதிப்பு

கான்பூர் போட்டியிலேயே இந்தியா வென்றிருக்க வேண்டும். ஆனால் அஸ்வின் இல்லாததால் பெரும் பாதகமாகி விட்டது. அடுத்து வந்த போட்டிகளிலும் அஸ்வினி் இல்லாததால் இந்திய அணி தடுமாறியது. இறுதியில் தொடரையும் இழந்து விட்டது.

டெஸ்ட்டுக்கு ரெடி

டெஸ்ட்டுக்கு ரெடி

இந்த நிலையில் தற்போது அஸ்வின் குணமடைந்து விட்டதாகவும், சிறப்பாக பந்து வீச முடிவதாகவும் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடத் தகுதி பெற்று விட்டதாகவும் சாஸ்திரி கூறியுள்ளார்.

பயிற்சி செய்தார்

பயிற்சி செய்தார்

இன்று பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் அஸ்வின் முழுவீச்சில் பயிற்சியில் ஈடுபட்டார். மற்ற ஸ்பின்னர்களோடு இணைந்து பந்து வீசினார். மேலும் கால்பந்தும் விளையாடினார்.

இலங்கையில் கலக்கல்

இலங்கையில் கலக்கல்

இலங்கை தொடரின்போது 3 டெஸ்ட் போட்டிகளில் 20 விக்கெட்களைச் சாய்த்து அசத்தியிருந்தார் அஸ்வின். அதேபோல இப்போதும் தென் ஆப்பிரிக்காவுக்கு பெரும் துயரத்தை அவர் அளிப்பார் என்ற நம்பிக்கையில் இந்தியர்கள் உள்ளனர்.

எல்லோருக்கும் பயம்

எல்லோருக்கும் பயம்

அஸ்வின் விளையாடினால் அவர்தான் எங்களுக்கு மிகப் பெரிய சவால் என்று ஏற்கனவே தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் டூப்ளஸிஸ், கேப்டன் ஹசிம் அம்லா ஆகியோர் கூறியுள்ளனர் என்பது நினைவிருக்கலாம். எனவே அஸ்வின் வருகை நிச்சயம் தென் ஆப்பிரிக்காவுக்கு கெட்ட செய்திதான்.

அஸ்வினுக்குக் குறி வைத்தால்

அஸ்வினுக்குக் குறி வைத்தால்

சாஸ்திரி இந்தப் போட்டி குறித்துக் கூறுகையில், அஸ்வினை அவர்கள் (தெ.ஆப்பிரிக்கா) ஓவராக போகஸ் செய்தால் எங்களிடம் மேலும் இரு ஸ்பின்னர்கள் உள்ளனர். அவர்களை வைத்து தென் ஆப்பிரிக்காவை மடக்குவோம் என்றார் சாஸ்திரி. ரவீந்திர ஜடேஜாவையும், அமீத் மிஸ்ராவையும்தான் அவர் மற்ற இருவராக குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, November 3, 2015, 18:32 [IST]
Other articles published on Nov 3, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+