Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வினுக்கு ஏற்பட்ட காயம்... குழப்பத்தில் இருந்த ரசிகர்கள்... 2வது டெஸ்டிற்கான விடை கிடைத்தது!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் பங்கேற்பாரா என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

முதல் டெஸ்டின் தோல்வியை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். இதற்காக தீவிர பயிற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் இந்திய அணிக்கு நம்பிக்கை தரும் விதமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 2வது டெஸ்டில் கண்டிப்பாக இடம் பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

 சாதனை

சாதனை

முதல் இன்னிங்சின் போது இந்திய அணி திணறிவந்த நிலையில், 2வது இன்னிங்சில் அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தார். குறிப்பாக 2வது இன்னிங்சின் போது அஸ்வின் 6 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.

 பதம் பார்த்த ஆர்ச்சர்

பதம் பார்த்த ஆர்ச்சர்

முதல் டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் 39வது ஓவரின் 3வது பந்தில் அஸ்வினுக்கு எதிராக ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீசினார். அப்போது அஸ்வின் கையில் பந்துபட்டு காயமேற்பட்டது. பின்னர் அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டார். அணியின் பிசியோ அவருக்கு கண்கஷன் பரிசோதனை மேற்கொண்டார்.

 இந்திய அணிக்கு ஆறுதல்

இந்திய அணிக்கு ஆறுதல்

இந்திய அணியில் ஏற்கனவே ஆல்ரவுண்டர் ஜடேஜா காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் அஸ்வினும் காயத்தால் விலகுவார் என்ற அச்சம் நிலவி வந்தது. இந்நிலையில் அவர் முழு உடற்தகுதியுடன் இருப்பதகாவும் 2வது இன்னிங்சில் அஸ்வின் நிச்சயம் பங்குபெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மீளுமா இந்தியா?

மீளுமா இந்தியா?

அஸ்வினை போன்று அக்‌ஷர் பட்டேலும் காயத்தில் இருந்து மீண்டும் முழு உடற்தகுதியை உறுதி செய்துள்ளார். இதனால் கடந்த போட்டியில் சுமாராக செயல்பட்ட நதீமுக்கு பதிலாக அக்‌ஷர் படேல் களமிறக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 பிட்ச் நிலவரம்

பிட்ச் நிலவரம்

முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணிக்கு, பிட்ச் சாதகமாக இருந்ததால் முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் குவிந்தது. பந்துகள் டேர்ன் ஆகாததால் இந்திய பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டனர். இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் ஆட்டத்தின் முதல் நாள் முதலே பந்துகள் நல்ல டேர்னிங் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் ரன் குவிப்பு குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Thursday, February 11, 2021, 14:04 [IST]
Other articles published on Feb 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+