Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக அளவில் கெத்து.. ஆதிக்கம் செலுத்தும் தமிழர்.. இதுமட்டும் சரியாக நடந்தால் அஸ்வினை அசைக்க முடியாது

சென்னை: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அஸ்வின் மிக முக்கியமான ஸ்பின் பவுலராக உருவெடுத்து உள்ளார். உலக அளவில் மிக சிறந்த ஸ்பின் பவுலராக அஸ்வின் மாறியுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணிக்காக ஆடி வரும் தமிழக வீரர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 579 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இவர் 377 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய முரளிதரன், வார்னே, கும்ப்ளே போன்றவர்களுக்கு இணையாக அஸ்வின் உருவெடுத்து இருக்கிறார். இவர்களையும் கூட அஸ்வின் சர்வதேச அளவில் மிஞ்சுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கி உள்ளது.

எப்படி

எப்படி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் மிகவும் சிறப்பாக பந்து வீசினார். மூன்று டெஸ்ட் போட்டிகள் ஆடிய நிலையிலும் மூன்றிலும் அஸ்வின் பவுலிங்தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. டெஸ்ட் அணியில் தனது அனுபவம் என்ன என்பதை அவர் ஆஸ்திரேலிய மண்ணில் நிரூபித்தார்.

லைன்

லைன்

சொந்த மண்ணில் அனுபவ ஸ்பின் பவுலர் நாதன் லைன் போன்ற வீரர்களே திணறிய போது அஸ்வின் தொடர் முழுக்க ஆதிக்கம் செலுத்தினார். இதன் மூலம் உலக அளவில் டெஸ்ட் போட்டிகளில் தான்தான் கெத்து என்பதை அஸ்வின் நிரூபித்துவிட்டார். தற்போது அஸ்வினுக்கு இன்னுமொரு கூடுதல் வாய்ப்பு தேடி வந்துள்ளது.

வாய்ப்பு

வாய்ப்பு

அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் தன்னுடைய முழு திறமையை வெளிக்காட்ட முடியும். காரணம் இந்த டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடக்கிறது. இதனால் அஸ்வின் தான் ஸ்பின் பவுலிங் பழகிய மைதானத்திலேயே தன்னுடைய திறமையை நிரூபிக்க முடியும். அதேபோல் அஸ்வின் எளிதாக விக்கெட்டுகளை எடுக்க முடியும்.

கைகொடுக்கும்

கைகொடுக்கும்

அஸ்வினுக்கு பயந்துதான் இங்கிலாந்து அணியே இந்தியா வந்துள்ளது. சென்னை ஸ்பின் மைதானம் என்பதால் அஸ்வினை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற அச்சம் இங்கிலாந்து அணிக்கு உள்ளது. இதனால் கண்டிப்பாக இந்த தொடரில் அஸ்வின் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவார்.

வித்தியாசம்

வித்தியாசம்

இங்கிலாந்து அணியில் அஸ்வின் அளவிற்கு சிறந்த ஸ்பின் பவுலர்கள் இல்லை. இதனால் அஸ்வின்தான் இரண்டு அணிக்கும் இடையிலான வித்தியாசமாக இருப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அஸ்வினும் தனது வாழ்நாள் பார்மில் இருக்கிறார். இந்த தொடரில் முத்திரை பதிப்பதன் மூலம் அஸ்வின் இந்திய அணியில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறலாம்.

டி 20

டி 20

தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடி வரும் அஸ்வின் இதன் மூலம் மீண்டும் டி 20, ஒருநாள் போட்டிகளுக்கும் திரும்ப முடியும். முக்கியமாக குல்தீப் யாதவின் பார்ம் அவுட்டிற்கு இடையில் அஸ்வின் மீண்டும் கம்பேக் கொடுக்க முடியும். இந்த தொடரில் மட்டும் அஸ்வின் காயமின்றி நன்றாக ஆடினால் அவர் அவ்வளவு எளிதாக இனி புறக்கணித்துவிட முடியாது.

Story first published: Monday, February 1, 2021, 18:07 [IST]
Other articles published on Feb 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+