Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாதனை படைக்க போகும் அஸ்வின்.. இலங்கை டெஸ்ட்டில் அருமையான வாய்ப்பு.. முழு விவரம் இதோ

மொஹாலி: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் தமிழக வீரர் அஸ்வின் புதிய சாதனை படைக்க உள்ளார்.

மொஹாலியில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்துள்ளது.

பலமான நிலை

பலமான நிலை

தற்போது அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் களத்தில் உள்ளனர். இந்தியா நாளை மதியம் 2 மணி வரை விளையாடி ஒரு 200 ரன்களை சேர்த்தால், 557 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டி டிக்ளேத் செய்யலாம். அப்படி இல்லை என்றாலும் குறைந்தபட்சம் மேலும் 100 ரன்களை சேர்த்தாலே, இந்திய அணி பலமான இடத்தில் தான் இருக்கும்.

சாதனையை எதிர்நோக்கி

சாதனையை எதிர்நோக்கி

ஏற்கனவே மொஹாலி ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படுகிறது. சில பந்துகள் திரும்புவதால், அஸ்வின், ஜடேஜா கூட்டணி இந்த ஆட்டத்தில் கலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இந்தியா நாளை பந்துவீசும் பட்சத்தில் தமிழக வீரர் அஸ்வின் ஒரு சாதனையை எதிர்நோக்கி உள்ளார்.

5 விக்கெட் தேவை

5 விக்கெட் தேவை

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள் பட்டியலில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் முதலிடமும், கபில்தேவ் 434 விக்கெட்டுகளுடன் 2வது இடத்தில் உள்ளார். தமிழக வீரர் அஸ்வின் 430 விக்கெட்டுகளுடன் தற்போது 3வது இடத்தில் உள்ளார். நாளை ஒரு 5 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினால்,

கபில்தேவ் சாதனை முறியடிப்பு

கபில்தேவ் சாதனை முறியடிப்பு

அஸ்வின் கபில்தேவின் சாதனையை முறியடித்துவிடுவார். கபில்தேவ் 227 இன்னிங்ஸ் எடுத்து கொண்ட நிலையில், அஸ்வின் தற்போது தான் 159வது இன்னிங்சை விளையாடுகிறார். எனினும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் கபில்தேவ் விக்கெட்டுகளை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, March 4, 2022, 18:34 [IST]
Other articles published on Mar 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+