
சென்னை
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் முதல் நாளிலேயே இந்திய வீரர்கள் விக்கெட்டை இழந்தாலும் தமிழக வீரர் அஸ்வின் சந்தோஷத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி இன்று அவுட்டான மூன்று இந்திய வீரர்களும் பிட்ச் காரணமாகவே அவுட் ஆனார்கள். இரண்டாவது ஓவரில் இருந்தே பிட்ச் பெரிய அளவில் ஸ்விங் ஆனது.

ரிவர்ஸ் ஸ்விங்
இரண்டாவது ஓவரில் ரிவர்ஸ் ஸ்விங் மூலம் சுப்மான் கில் அவுட் ஆனார். அதன்பின் புஜாராவும் பந்து ஸ்விங் ஆகி அதை கணிக்க முடியாமல் அவுட் ஆனார். பின்னர் கோலியும் கூட எதிர்பார்க்காத வகையில் மொயின் அலி பவுலிங்கில் அவுட் ஆனார் . இந்த பந்து ஸ்விங் ஆனதை கோலி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

எதிர்பார்க்கவில்லை
இந்த டெஸ்ட் போட்டியில் தற்போது பந்து முதல் நாளில் இருந்தே ஸ்விங் ஆகிறது. இது இந்திய வீரர்களுக்கு எதிராக திரும்பி உள்ளது. ஆனாலும் ஸ்விங் ஆவதையும் தாண்டி ரோஹித் சர்மா தற்போது சதம் அடித்துள்ளார். நாளை பிட்ச் இன்னும் மோசமாகும் வாய்ப்புகள் உள்ளது.

மோசமாகும்
இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் முதல் நாளிலேயே இந்திய வீரர்கள் விக்கெட்டை இழந்தாலும் தமிழக வீரர் அஸ்வின் சந்தோஷத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய வீரர்கள் அவுட் ஆனதற்கு இவர் சந்தோசம் அடையவில்லை . பிட்ச் முழுக்க முழுக்க இவரின் ஆப் ஸ்பின் ஸ்டைலுக்கு ஏற்றப்படி உள்ளது. இதனால் இவர் எளிதாக விக்கெட் எடுக்க முடியும்.

விக்கெட்
அஸ்வின் எந்த பிட்சில் நிறைய ஓவர்களை வீசி இருக்கிறாரோ அதே பிட்சில் தற்போது பவுலிங் செய்ய போகிறார். இந்த பிட்ச் ஸ்டைல் அவருக்கு மிகவும் பழக்கப்பட்டது. அதிலும் நாளை பிட்ச் இன்னும் அதிகம் ஸ்விங் ஆகும். பிட்ச் முழுக்க முழுக்க ஸ்பின் பிட்சாக மாறும்.

சிறப்பு
இதனால் அஸ்வின் கண்டிப்பாக நாளை அதிக விக்கெட்டுகளை எடுப்பார். அஸ்வின் குறைந்தது 5 விக்கெட்டாவது எடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். நாளை இங்கிலாந்து அணிக்கு அஸ்வின் கண்டிப்பாக பெரிய அளவில் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications