Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக அளவுல அஸ்வின்தான் மிகச்சிறந்த ஆப்-ஸ்பின்னர் -சொல்கிறார் ஹர்பஜன்

டெல்லி : தற்போதைய சூழலில் சர்வதேச அளவில் மிகசிறந்த ஆப்-ஸ்பின்னர் ஆர் அஸ்வின் தான் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹர்பஜன் சிங் மற்றும் அஸ்வின் இருவரும் இந்திய அணியில் சிறந்த போட்டியாளர்களாக கருதப்பட்ட நிலையில் ஹர்பஜன் சிங் தற்போது இவ்வாறு கூறியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் பேசியஇருவரும் கிரிக்கெட் குறித்தும் தங்களது ஆட்டங்கள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

ஹர்பஜன், அஸ்வின் இடையில் போட்டி

ஹர்பஜன், அஸ்வின் இடையில் போட்டி

கடந்த 10 ஆண்டுகளின் துவக்கத்தில் இந்தியாவின் சிறப்பான ஆப் ஸ்பின்னர்களாக ஹர்பஜன் சிங் மற்றும் ஆர் அஸ்வின் ஆகியோர் இருந்தனர். இவர்கள் இருவருக்கிடையில் இதில் ஆரோக்கியமான போட்டியும் நிலவியது. ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக் கொண்டு பௌலிங்கில் கலக்கினர்.

ஹர்பஜன் சிங் கருத்து

ஹர்பஜன் சிங் கருத்து

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் வீட்டில் முடங்கியுள்ள விளையாட்டு வீரர்கள் நேரலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூலம் பேசி வருகின்றனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலமாக ஹர்பஜன் சிங் மற்றும் அஸ்வின் இருவரும் உரையாடி பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது சர்வதேச அளவில் தற்போதைய சூழலில் அஸ்வின் சிறந்த ஆப்-ஸ்பின்னராக விளங்குவதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் செயலுக்கு அஸ்வின் பாராட்டு

ஹர்பஜன் செயலுக்கு அஸ்வின் பாராட்டு

கடந்த 2000ல் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஹேய்டனின் கேட்சை தவறவிட்டதற்கு பகுதுலேவிடன் ஹர்பஜன் மன்னிப்பு கேட்டதை தன்னிடம் சுட்டிக் காட்டி தன்னுடைய தந்தை பாராட்டு தெரிவித்ததாகவும், அதிலிருந்து தான் சிறப்பான பாடம் கற்றதாகவும் அஸ்வின் இந்த உரையாடலின்போது தெரிவித்தார்.

அஸ்வின் சிறந்த ஆப்-ஸ்பின்னர்

அஸ்வின் சிறந்த ஆப்-ஸ்பின்னர்

சர்வதேச அளவில் அஸ்வின் சிறந்த ஆப் ஸ்பின்னராக விளங்குவதாகவும், அதையடுத்து நாதன் லியோன் சிறந்த ஆப்-ஸ்பின்னராக இருப்பதாகவும் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். மேலும் மற்றவர்கள் கூறுவது போல அஸ்வினுக்கும் தனக்கும் இடையில் எந்தவிதமான பொறாமையும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, May 5, 2020, 14:55 [IST]
Other articles published on May 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+