Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2015ம் ஆண்டை பிரித்து மேய்ந்த அஸ்வின்.. !

சென்னை: இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின்தான் இந்த ஆண்டின் டாப் மோஸ்ட் சக்சஸ்புல் பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார். 2015ம் ஆண்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்து வீச்சாளர் அஸ்வின்தான். இந்திய அளவிலும் மிகவும் வெற்றிகரமான பந்து வீச்சாளர் அஸ்வின்தான்.

இந்த ஆண்டு அஸ்வின் ஆண்டு என்று கூடச் சொல்லலாம்.. தப்பே இல்லை.. காரணம் போகும் இடமெல்லாம் விக்கெட் விளையாட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார் அஸ்வின்.

பங்கேற்கும் போட்டிகளில் எதிரணி பேட்ஸ்மேன்களை திராட்டில் விடுவதே இவரது வேலையாகப் போய் விட்டது. பந்தை எடுத்தால் விக்கெட் வீழ்த்தாமல் கீழே வைப்பதில்லை அஸ்வின்.

என்னா ஒரு சுழல்

என்னா ஒரு சுழல்

அஸ்வின் இந்த ஆண்டின் வெற்றிகரமான டெஸ்ட் பவுலராக உருமாறியிருக்கிறார். வெறும் எட்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பங்கேற்று பந்து வீசி 55 விக்கெட்களை அள்ளியுள்ளார் அஸ்வின்.

6 முறை 5

6 முறை 5

இதில் 6 முறை 5 விக்கெட்களைச் சாய்த்து எதிரணியினரை அதிர வைத்துள்ளது அஸ்வினின் ஸ்பெஷாலிட்டியாகும். அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 66 ரன்களைக் கொடுத்து 7 வி்க்கெட்களைச் சாய்த்துள்ளார் அஸ்வின்.

2வது இடத்திற்குப் போன ஸ்டூவர்ட் பிராட்

2வது இடத்திற்குப் போன ஸ்டூவர்ட் பிராட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கு முன்பு வரை இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்தான் 51 விக்கெட்களுடன் முதலிடத்தில் இருந்து வந்தார். அவர் 13 போட்டிகளில் இதைச் செய்திருந்தார். ஆனால் 8 போட்டிகளிலேயே அசத்தி விட்டார் அஸ்வின்.

நம்பர் ஒன் ஸ்பினர் இவர்தான் பாஸ்

நம்பர் ஒன் ஸ்பினர் இவர்தான் பாஸ்

தற்போதைக்கு உலகின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். அவரது பந்து வீச்சை வயிற்றெரிச்சலால் கமெண்ட் செய்து கொண்டிருந்த உள்ளூர் பெருச்சாளிகளுக்கும் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் நெத்தியடி பதில் கொடுத்துள்ளார் அஸ்வின்.

அதிக வேக 150

அதிக வேக 150

அது மட்டுமல்லாமல் அதி வேகமாக 150 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் சமீபத்தில்தான் செய்திருந்தார் அஸ்வின். அதாவது முதல் டெஸ்ட் போட்டியின்போது அதைச் செய்திருந்தார்.

2013க்குப் பிறகு இப்போதுதான்

2013க்குப் பிறகு இப்போதுதான்

2013ம் ஆண்டுதான் அஸ்வின் சிறப்பாக பந்து வீசியிருந்தார். அந்த ஆண்டில் அவர் 44 விக்கெட்களைச் சாய்த்திருந்தார். கடந்த ஆண்டு அவருக்கு ராசியானதாக இல்லை. வெறும் 10 விக்கெட்களைத்தான் எடுத்திருந்தார். இப்போது அவர் அதைத் தாண்டி வந்து கலக்க விட்டார்.

10 டெஸ்ட் கூட தாண்டியதில்லை

10 டெஸ்ட் கூட தாண்டியதில்லை

இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் பந்து வீச வந்த 2011ம் ஆண்டிலிருந்து இதுவரை எந்த ஆண்டிலும் 8 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் தாண்டியதில்லை அஸ்வின் என்பது. இந்த ஆண்டுதான் அவர் எட்டு போட்டிகளுக்கு மேல் ஆடவுள்ளார்.

தென் ஆப்பிரிக்க தொடரிலும் அஸ்வினே லீடிங்

தென் ஆப்பிரிக்க தொடரிலும் அஸ்வினே லீடிங்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கூட அஸ்வினே அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளராக திகழ்கிறார். அவர் 3 டெஸ்ட் போட்டிகளில் 24 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். அதில் 3வது டெஸ்ட் போட்டியில் மட்டும் 12 விக்கெட்களை அள்ளினார். அடுத்த இடத்தில் ரவீந்திர ஜடேஜா 16 விக்கெட்களுடன் உள்ளார். அமீத் மிஸ்ரா 7 விக்கெட்களுடன் 6வது இடத்தில் உள்ளார்.

எல்லாமே கேட்ச் கேட்ச்

எல்லாமே கேட்ச் கேட்ச்

அஸ்வினுக்குக் கிடைத்த விக்கெட்கள் பெரும்பாலும் கேட்ச் மூலம் வந்தவையாகும். அதாவது 74 விக்கெட்கள் இப்படி வந்துள்ளன. 44 விக்கெட்கள் எல்பிடபிள்யூ முறையில் கிடைத்துள்ளன. 32 விக்கெட்களை போல்டு மூலம் கைப்பற்றினார். காட் பிஹைன்ட் விக்கெட் 12 ஆகும். ஸ்டம்ப்ட் 7 ஆகும். இதுவரை இவரது பந்து வீச்சில் யாரும் ஹிட் விக்கெட் ஆனதில்லை. இதுவரை 31 போட்டிகளில் 169 விக்கெட்களைச் சாய்த்துள்ளார் அஸ்வின்.

Story first published: Saturday, November 28, 2015, 11:39 [IST]
Other articles published on Nov 28, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+