For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய பவுலர் அஸ்வின்

By Veera Kumar

மொகாலி: இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 29 டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி, குறைந்த போட்டியில் அதிக விக்கெட்டை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மொகாலி டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை சாய்த்தார் அஸ்வின். இந்த 5 விக்கெட்டுகளையும் சேர்த்து அவரது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 150ஆக உயர்ந்தது. 29 டெஸ்ட் போட்டிகளில் இத்தனை விக்கெட்டுகளை அவர் சாய்த்துள்ளார்.

Ashwin is the fastest Indian bowle to reach the landmark of 150 wickets

இதன் மூலம் அதிவேகமாக 150 விக்கெட் எண்ணிக்கையை தொட்ட இந்தியர் என்ற புதிய சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்பு முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்கள் எரப்பள்ளி பிரசன்னா மற்றும் அனில் கும்பிளே தங்களது 34வது டெஸ்டில் 150 விக்கெட்டை கடந்திருந்தனர். அந்த சாதனையை அஸ்வின் முறியடித்து இருக்கிறார்.

ஒட்டுமொத்தத்தில் 150 விக்கெட்டை அதி வேகத்தில் எட்டியவர் இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சிட்னி பார்ன்ஸ். இவர் தனது 24வது டெஸ்டில் அத்தனை விக்கெட்டுகளை சாய்த்தார். 1913ம் ஆண்டு படைக்கப்பட்ட இச்சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை.

இந்த சாதனை பட்டியலில் பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் 2வது இடத்திலும், (27 டெஸ்ட்), ஆஸ்திரேலியாவின் கிளாரி கிரிம்மெட் (28 டெஸ்ட்) 3வது இடத்திலும் உள்ளனர். 4வது இடத்தை ஹக் டைபீல்டு (தென்ஆப்பிரிக்கா), இயான் போத்தம் (இங்கிலாந்து), சயீத் அஜ்மல் (பாகிஸ்தான்), தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் ஆகியோருடன் அஸ்வின் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கடந்த இரு வருடங்களாக இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டி ஆடாத நிலையிலும், அஸ்வின் இத்தனை விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது கவனிக்கத்தக்கது.

அஸ்வின் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்துவது இது 13வது முறை. அந்த வகையில் பாகிஸ்தானின் வக்கார் யூனிசின் சாதனையை சமன் செய்துள்ளார்.

அஸ்வின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்சம் 50 விக்கெட்டுகளை சாய்த்து்ள்ளார். 10 டெஸ்ட் போட்டிகளின் மூலம், இந்த இலக்கை எட்டினார்.

Story first published: Saturday, November 7, 2015, 10:37 [IST]
Other articles published on Nov 7, 2015
English summary
இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 29 டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி, குறைந்த போட்டியில் அதிக விக்கெட்டை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+