Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஊரு உலகமே பயந்துகிட்டு இருந்த அஸ்வின், ஜிம்பாப்வே சின்ன பசங்ககிட்ட இப்படி வாங்கிகட்டிட்டாரே!

ஆக்லாந்து: உலக கோப்பை வரலாற்றிலேயே இந்திய சுழற்பந்து வீச்சாளர் வாரி வழங்காத அளவுக்கு ரன்களை, ஜிம்பாப்வேக்கு எதிராக அள்ளிக் கொடுத்துள்ளார் அஸ்வின்.

உலக கோப்பையில், இந்திய ஸ்பின்னர் அஸ்வின் ஜொலித்து வந்தார். பெரிய அணிகளே, அவரது பந்து வீச்சில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது என்று புலம்பின. அஸ்வின் சமத்தான மாணவன் என்று சர்ட்டிபிகேட் கொடுத்தார், நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளமிங்.

சிக்கன பவுலர்

சிக்கன பவுலர்

நடப்பு உலக கோப்பையில், அஸ்வினின் எக்கனாமி ரேட், 4.91 ரன்களாகத்தான் இருந்து வந்தது. ஆனால், இதெல்லாம், இன்று ஜிம்பாப்பேயிடம் மோதுவதற்கு முன்புவரைதான்.

சுழல்னா அடிப்போம்

சுழல்னா அடிப்போம்

ஏனெனில், ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்களுக்கு அப்படி என்ன கோபமோ தெரியவில்லை, இந்திய சுழற்பந்தை குறிவைத்து துவைத்தெடுத்தனர். அதிலும், அஸ்வின் பந்து வீச்சை கிழித்து காயவிட்டனர்.

அம்மாடியோவ்..

அம்மாடியோவ்..

10 ஓவர்கள் பந்து வீசிய, அஸ்வின் 75 ரன்களை வாரிக் கொடுத்தார். பலனாக, 1 விக்கெட் மட்டுமே கிடைத்தது.

முதல் ஸ்பின்னர்

முதல் ஸ்பின்னர்

உலக கோப்பை வரலாற்றில், 10 ஓவர்கள் வீசி, இவ்வளவு அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த முதல், இந்திய ஸ்பின்னர் என்ற அவப்பெயர் அஸ்வினுக்கு இன்று கிடைத்துள்ளது.

அஸ்வின் வரலாற்றில் முதல்முறை

அஸ்வின் வரலாற்றில் முதல்முறை

அஸ்வின் இதுவரை விளையாடியுள்ள, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இவ்வளவு அதிக ரன்களை கொடுத்ததும் இதுதான் முதல் முறை.

ஸ்ரீநாத் இருக்காரே..

ஸ்ரீநாத் இருக்காரே..

உலக கோப்பையில் ஒரே போட்டியில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தவர் என்ற கெட்ட பெயர், வேகப்பந்து வீச்சாளர், ஜவகல் ஸ்ரீநாத்துக்கு உள்ளது. 2003 உலக கோப்பை இறுதி போட்டியில், ஆஸ்திரேலியாவின் பாண்டிங், சதம் அடித்த நிலையில், அவரிடம் சிக்கி இத்தனை ரன்களை விட்டுக்கொடுத்தார் ஸ்ரீநாத்.

Story first published: Saturday, March 14, 2015, 11:56 [IST]
Other articles published on Mar 14, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+