For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உமேஷ் யாதவ் வீசிய பந்தில் அஸ்வின் கையில் காயம்.. ஐஸ் ஒத்தடம் கொடுத்து ஆறுதல்!

By Veera Kumar

மெல்போர்ன்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மூன்று மெய்டன்கள் வீசி அசத்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு பயிற்சியின்போது காயம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உலக கோப்பையில் பாகிஸ்தானுடனான முதலாவது லீக் ஆட்டத்தில் இந்தியா அபாரமாக வென்றது. அதில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கும் முக்கிய பங்கு உள்ளது. அவர் அந்த போட்டியில் மூன்று மெய்டன் ஓவர்களை வீசி பாகிஸ்தான் வீரர்களை ரன் எடுக்க விடாமல் செய்தார்.

அஸ்வின் மெய்டன்

அஸ்வின் மெய்டன்

1979ல் இந்தியாவின் வெங்கட்ராகவன் இதுபோன்ற 3 மெய்டன் சாதனையை நிகழ்த்திய பிறகு இப்போதுதான் அஸ்வின் அதை சமன் செய்தார்.

தென் ஆப்பிரிக்காவுடன் மோதல்

தென் ஆப்பிரிக்காவுடன் மோதல்

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா மோதுகிறது.

ஸ்பின்னில் வீக்

ஸ்பின்னில் வீக்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அனைத்து பிரிவுகளிலும் வலுவாக இருந்தாலும், ஸ்பின் பந்தை எதிர்கொள்வதில் அந்த அணியின் பல பேட்ஸ்மேன்கள் தடுமாறுவார்கள். எனவே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, அஸ்வின்தான் இந்தியாவுக்கான துருப்பு சீட்டு பந்து வீச்சாளராக களம் காண உள்ளார்.

ஐஸ் ஒத்தடம்

ஐஸ் ஒத்தடம்

இந்நிலையில் நேற்று பேட்டிங் செய்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் அஸ்வின். அவருக்கு வேகப்பந்து வீச்சாளற் உமேஷ் யாதவ் பந்து வீசினார். அதில் ஒரு பந்து அஸ்வின் கையில் பட்டு காயம் ஏற்பட்டது. வலி காரணமாக பேட்டை கீழே போட்டுவிட்டு கையை உதறியபடி கீழே உட்கார்ந்தார் அஸ்வின். இதனால் பயிற்சி நடைபெற்ற இடத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

அப்பாடா

அப்பாடா

இதையடுத்து அஸ்வினுக்கு ஐஸ் ஒத்தடம் தரப்பட்டது. காயத்தை ஆய்வு செய்த பிசியோ நிபுணர்கள், லேசான காயம்தான் என்பதால் அஸ்வின் தொடர்ந்து விளையாடலாம் என்று பச்சைக் கொடி காண்பித்தனர். இதன்பிறகுதான் சக வீரர்களுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.

புவனேஸ்வர் குமாரும் ரெடி

புவனேஸ்வர் குமாரும் ரெடி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கு முன்பு கணுக்காலில் காயம் அடைந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்துக்கு முன்பு உடல் தகுதி பெறுவது கடினம் தான் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அஸ்வின் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகிய இருவருமே நல்ல உடல் தகுதியுடன் உள்ளதாக பிசிசிஐயின் செய்தி தொடர்பாளர் பாபா அறிவித்துள்ளார்.

Story first published: Thursday, February 19, 2015, 13:21 [IST]
Other articles published on Feb 19, 2015
English summary
India have dismissed reports questioning the fitness of Bhuvneshwar Kumar and Ravichandran Ashwin and said both are "very much available" for their second World Cup match against South Africa in Melbourne on Sunday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X