கோலியை மட்டம் தட்டினாரா அஸ்வின்.. ரோகித்தை புகழும் போது, அந்த வார்த்தை.. கவனிச்சீங்களா?
நாக்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்கள் தற்போது மகிழ்ச்சியாக உள்ளனர். எனினும் அடுத்த போட்டி வரும் 17ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி மூன்று நாட்களில் முடிந்து விட்டது.
இதனால் இந்திய அணி வீரர்களுக்கு கூடுதலாக தற்போது இரண்டு நாட்கள் ஓய்வு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த வீரர்களின் அஸ்வினும் கேப்டன் ரோகித் சர்மாவும் நேற்று ஆட்டம் முடிந்தவுடன் ஒருவரை ஒருவர் பேட்டி கண்டனர்.

மகிழ்ச்சி
அப்போது அஸ்வின் , கேப்டன் ரோகித் சர்மாவை வெகுவாக பாராட்டினார். அப்போது பேசிய அவர் உங்களுக்கு கீழ் விளையாடி இப்போதுதான் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை எடுத்து இருக்கிறேன். இது உண்மையிலே மகிழ்ச்சியான தருணமாக இருக்கிறது. நாம் இருவரும் கிரிக்கெட் தொடர்பாக நிறைய அர்த்தமுள்ள விவாதங்களை செய்து இருக்கிறோம்.களத்தில் எதிர் அணியை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து உங்களுடன் பேசும்போது நான் அந்த தருணத்தை மகிழ்ச்சியாக தான் எடுத்துக் கொள்வேன்.

அழுத்தம் இல்லை
உங்களுக்கு கீழ் நான் பேட்ஸ்மேன் ஆகவும் சரி பந்துவீச்சாளராகவும் சரி இன்னும் வெற்றிக்காக நிறைய பங்களிப்பை கொடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
என் மீதான எதிர்பார்ப்பு மற்றும் பல விஷயங்கள் மாறி இருக்கிறது. எனினும் என்னுடைய ஆட்டத்தை தற்போது நான் நெருக்கடி இல்லாமல் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு வருகிறேன். இதனால் என் மீதான அழுத்தம் முற்றிலுமாக சென்றுவிட்டது.

ரோகித் பதில்
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் உங்களுக்கு கீழ் நான் விளையாடும் போது எந்த நெருக்கடியும் இல்லாமல் மகிழ்ச்சியாக விளையாடுகிறேன்.
உங்களுடைய இந்த வெற்றி பயணத்தில் நானும் இணைந்து பயணிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த ரோஹித் சர்மா உங்களுடைய கருத்து எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் பல்வேறு சாதனைகளை படைக்கும் போது நிச்சயம் அது பெருமைக்குரியதாக நான் கருதுகிறேன் என்று கூறினார்.

கோலிக்கு மறைமுக தாக்கு
விராட் கோலி தலைமையில் அஸ்வின் விளையாடும்போது பல்வேறு வெளிநாட்டு போட்டிகளில் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கூட அஸ்வின் விளையாடவில்லை. இந்த நிலையில் அதனை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் உங்களுக்கு கீழ் விளையாடுவது நெருக்கடி இல்லாமல் இருப்பதாக அஸ்வின் கூறி இருக்கிறார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications