
எப்படி
பவுலிங்கில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டார். இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். இதற்கு முன் ஆஸ்திரேலிய தொடரிலும் இவர் நன்றாக ஆடினார். மூன்றாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்ய அஸ்வின்தான் முக்கிய காரணமாக இருந்தார்.

அதிரடி
இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக தமிழக வீரர் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக அடி வரும் நிலையில் இவருக்கு முக்கியமான குட் நியூஸ் ஒன்று கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அதன்படி மீண்டும் லிமிடட் ஓவர் போட்டிகளில் அஸ்வின் ஆடுவார் என்று கூறப்படுகிறது. ஆம் மீண்டும் டி 20 அணிக்கு அஸ்வின் வர வாய்ப்புகள் உள்ளது.

மீண்டும்
டி 20 அல்லது ஒருநாள் அணிக்கு மீண்டும் அஸ்வின் வர வாய்ப்புள்ளது . அஸ்வினின் பேட்டிங் பவுலிங் இரண்டும் நன்றாக இருக்கிறது. இதனால் இவர் மீண்டும் இந்திய அணியில் குல்தீப் யாதவின் இடத்தை நிரப்புவார் என்கிறார்கள். ஜடேஜா, அஸ்வின், சாஹல் ஆகியோர் லிமிடட் ஓவர் போட்டிகளில் இந்திய அணியில் ஆட வாய்ப்புள்ளது.

அஸ்வின்
முக்கியமாக டி 20 தொடர்களில் அஸ்வினை கொண்டு வர கோலி திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. குல்தீப் யாதவ் மோசமான பார்மில் இருக்கிறார். வாய்ப்பு கிடைத்த டெஸ்ட் போட்டியிலும் அவ்வளவு சிறப்பாக பவுலிங் செய்யவில்லை. இதனால் அஸ்வின் மீண்டும் அணிக்குள் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

எத்தனை
கடைசியாக 4 வருடம் முன் 2017ல்தான் அஸ்வின் லிமிடட் ஓவர் போட்டிகளில் ஆடினார். அதன்பின் அஸ்வின் இந்திய அணிக்குள் வரவில்லை. இப்போது கோலியுடன் அஸ்வின் நெருக்கமாகி உள்ள நிலையில் மீண்டும் அஸ்வினுக்கு ஒருநாள் அல்லது டி 20 அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications