Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுவரை இந்தியாவை இப்படி பார்த்ததே இல்லை.. வாயை பிளந்த அஸ்வின்.. கும்பிட்ட மைக் ஹெஸ்ஸன்!

மும்பை : கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய மக்கள் அனைவரும் ஒரு நாள் சுய ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அது வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவில் மக்கள் சுய ஊரடங்கு வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டதை கண்டு கிரிக்கெட் வீரர் அஸ்வின் வியந்துள்ளார்.

அதே போல, தற்போது மும்பையில் இருக்கும் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் மக்களின் இந்த ஊரடங்கை கண்டு கையெடுத்து கும்பிட்டு தன் வியப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல்

கொரோனா வைரஸ் பரவல்

உலகத்தை அச்சுறுத்தி வருகிறது நாவல் கொரோனா வைரஸ். கடந்த ஜனவரி மாதம் சீனாவில் துவங்கி, பின் பல உலக நாடுகளுக்கு பரவி, தற்போது 130க்கும் மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் அந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் இதுவரை 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இது பல மடங்காக உயரும் அபாயம் உள்ளது. இந்த நிலையில், சோசியல் டிஸ்டன்சிங் குறித்து அதிகம் பேசப்படுகிறது.

மக்கள் சுய ஊரடங்கு

மக்கள் சுய ஊரடங்கு

அதாவது, மக்கள் தங்களை தாங்களே மற்றவர்களிடம் இருந்து தள்ளி வைத்துக் கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது. இதன் மூலம், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை குறைக்கலாம். இதை மக்களிடையே கொண்டு செல்ல மத்திய அரசு ஒருநாள் மக்கள் சுய ஊரடங்கை அறிவித்தது.

அந்த நாள்

அந்த நாள்

மார்ச் 22 ஞாயிறு அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதை மக்கள் ஏற்றுக் கொண்டு ஞாயிறு அன்று காலை முதலே அமல்படுத்தினர்.

வெறிச்சோடிய சாலைகள்

வெறிச்சோடிய சாலைகள்

நாட்டின் முக்கிய நகரங்களின் பல முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. எப்போதும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஊர்ந்து செல்லும் சாலைகளில், ஒரு வாகனத்தை கூட காண முடியாத அதிசய நிலை ஏற்பட்டது.

அஸ்வின் வியப்பு

இதைக் கண்ட இந்திய அணி வீரர் அஸ்வின் இதை நம்பவே முடியவில்லை. பள்ளிக்கூடத்தில் சொல்வது போல ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்காது போல. இது இந்த நாளை தாண்டியும் செல்லும் என நான் எதிர்பார்க்கிறேன். சோசியல் டிஸ்டன்சிங் விரைவில் வரும் என கூறி உள்ளார்.

மும்பை சாலை

மும்பை சாலை

அதே போல, மும்பையில் ஒரு ஹோட்டலில் தங்கி உள்ள நியூசிலாந்து நாட்டை சேர்ந்த கிரிக்கெட் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன், மும்பையின் பரபரப்பான பாந்த்ரா - வொர்லி கடற்கரை மேம்பால சாலை காலியாக இருப்பதை புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார்.

1000 கார்கள்

1000 கார்கள்

மேலும், அந்த பதிவில், இந்த இடத்தை பல முறை என் ஹோட்டல் அறையில் இருந்து நான் பார்த்துள்ளேன். ஆனால், எப்போதும் 1000 கார்களுக்கு குறையாமல் இருக்கும் என அந்த காலியாக இருக்கும் சாலையின் புகைப்படத்தின் கீழ் குறிப்பிட்டுள்ளார்.

மைக் ஹெஸ்ஸன் வியப்பு

மேலும், இந்தியாவில் கொரோனா வைரஸை எதிர்த்து இன்று 14 மணி நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அது மிகச் சரியாக பின்பற்றப்படுவது போல தெரிகிறது என கையெடுத்து கும்பிடும் படங்களை பதிவிட்டுள்ளார் மைக் ஹெஸ்ஸன்.

Story first published: Sunday, March 22, 2020, 19:51 [IST]
Other articles published on Mar 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+