அச்சச்சோ.. தந்தை அஸ்வின் ஆட்டமிழப்பு.. மனம் உடைந்து அழுத அன்பு மகள்.. ரசிகர்கள் விமர்சனம்
பெங்களூரு: ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோல்வியை தழுவியது. இதன் மூலம் பெங்களூரு அணி 8 புள்ளிகளை பெற்று தற்போது 5வது இடத்தை பிடித்துள்ளது.
இதன் காரணமாக ஐபிஎல் புள்ளி பட்டியலில் முதல் 6 இடங்கள் பிடித்த அணிகள் அனைத்தும் 8 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்தப்போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று இருக்க வேண்டியது. அஸ்வின் செய்த தவறால் தான் அது நடக்காமல் போய் விட்டதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. இதில் அஸ்வினுடன் ஜூரல் என்ற அதிரடி வீரர் களத்தில் நின்றார். முதல் பந்தில் அஸ்வின் பவுண்டரி அடிக்க, இரண்டாவது பந்தில் சிங்கிள்ஸ் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அஸ்வின் டபுள்ஸ் ஓடி விட்டார்.
இதனால் சிக்சர் அடிக்க கூடிய ஜீரல் பந்தை அடிக்க முடியாமல் போனது. அஸ்வின் 3வது பந்தில் பவுண்டரி அடித்தாலும், 4வது பந்தில் தூக்கி அடித்து ஆட்டமிழந்தார். இதுவே ஜூரல் கடைசி 4 பந்துகளையும் பிடித்திருந்தால், ராஜஸ்தான் வெல்ல வாய்ப்பாவது கிடைத்திருக்கும். இந்த நிலையில், அஸ்வின் கேட்ச் ஆனதும், மைதானத்தில் இதனை பார்த்த அவரது மகள், அழத் தொடங்கிவிட்டார். இதனை பார்த்ததும் ரசிகர்கள் மனது கிரங்கியது.


Click it and Unblock the Notifications