Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவ்வளவு சீக்கிரம் இங்கே வாய்ப்பு கிடைக்காது..வாங்க தம்பினு யாரும் கூப்பிட மாட்டாங்க! அஸ்வின் அட்வைஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவனாக விளங்கிய தமிழக வீரர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு வந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றி இருக்கிறார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 156 விக்கெட் சர்வதேச டி20 கிரிக்கெட்டில், 72 விக்கெட்டுகளும் அஸ்வின் வைத்திருக்கிறார். எனினும் அஸ்வின் தொடர்ந்து ஐபிஎல், டிஎன்பிஎல் போன்ற தொடர்களில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ravichandran ashwin ashwin retirement r ashwin

இந்த நிலையில் அஸ்வின் இளைஞர்களிடம் வாய்ப்புக்காக எப்படி போராட வேண்டும் என்பது குறித்து அட்வைஸ் செய்ததை தற்போது பார்க்கலாம். அதில் நான் இளைஞராக இருக்கும் போது என்னை நான் ஒரு சிறந்த சுழற் பந்துவீச்சாளர் என்று நினைத்துக் கொண்டேன். நம்மை பார்த்த உடனே ஆஹா தம்பி இவ்வளவு நாளா நீ எங்க இருந்த என்று என அழைத்து உடனே இந்திய அணிக்காக விளையாட வைப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

இந்த எண்ணத்தில் இருந்ததால் பெரிய அளவு நான் வாய்ப்புக்காக முயற்சி செய்தது கிடையாது. ஒரு முறை வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது வலைப்பயிற்சியில் பந்து வீசுவதற்காக என்னை அழைத்து இருந்தார்கள். நான் அப்போது நாளை நாம் பந்துவீசுவதை பார்த்துவிட்டு உடனே நம்மை இந்திய அணிக்கு விளையாட வைப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு சென்றேன்.

ஆனால் அங்கு போன பிறகு தான் தெரிந்தது. நான் பந்து வீசியதை யாரும் ஒரு பொருட்டாக கூட நினைக்கவில்லை. நான் யார் கண்களுக்கும் தெரியவில்லை. அப்போதுதான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது. நாம் வாய்ப்புக்காக கடுமையாக உழைக்க வேண்டும். திறமை இருந்தால் மட்டும் போதாது. தொடர்ந்து முயற்சி செய்தால் மட்டுமே வாய்ப்பு என்பது கிடைக்கும் என்பதை தீர்மானித்துக் கொண்டேன்.

அதிலிருந்து நான் கடுமையாக உழைக்க தொடங்கி விட்டேன். ஒவ்வொரு போட்டியிலும் எப்படி விக்கெட்டுகள் எடுக்கலாம். எப்படி அணியின் வெற்றிக்கு முயற்சி செய்யலாம் என்பது குறித்து யோசித்துக் கொண்டேன். கிளப் லெவல் கிரிக்கெட் மற்றும் ஒவ்வொரு கிரிக்கெட் போட்டிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினேன். அப்போதுதான் அனிருதா ஸ்ரீகாந்த் என்னுடைய பந்துவீச்சை பாராட்டி அவரின் தந்தை ஸ்ரீகாந்த இடம் கூறினார்.

அதன் பிறகு ஸ்ரீகாந்த் என்னுடைய பந்துவீச்சை பார்த்து சிஎஸ்கேவிடம் என்னை பற்றி புகழ்ந்து பேசினார். அதன் பிறகு தான் எனக்கு ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. எனவே நம்மை பார்த்த உடனே வாய்ப்பை தூக்கி கையில் கொடுப்பார்கள் என்று நினைக்காதீர்கள். வாய்ப்புக்காக முயற்சி செய்யுங்கள். திறமையை வளர்த்து கொள்ளுங்கள் என அஸ்வின் கூறியிருக்கிறார்.

Story first published: Thursday, December 19, 2024, 13:31 [IST]
Other articles published on Dec 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+