மும்பை : இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் நடைபெறுகிறது என்றால் பிளேயிங் லெவனின் குறைந்தபட்சம் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள். இந்த இரண்டு வீரர்களின் பெரும்பாலானோர் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆக தான் இருப்பார்கள். ஆசிய கண்டத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் போது இந்த இரண்டு வீரர்களும் பந்துவீச்சில் கூட்டணி அமைத்து விக்கெட்டுகளை எடுப்பது வழக்கம்.
அது மட்டும் இல்லாமல் பேட்டிங்கில் கீழ் வரிசையில் இறங்கி இருவருமே அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்து இருக்கிறார்கள். ஆனால் வெளிநாட்டில் இதே டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது என்றால் பிளேயிங் லெவனில் ஒரு சுழற்பந்துவீச்சாளர் தான் இருப்பார். அந்த வகையில் அஸ்வின் நீக்கிவிட்டு பெரும்பான்மையான கேப்டன் ஜடேஜாவை தான் அணியில் தேர்வு செய்வார்கள்.

இந்த நிலையில் அஸ்வினும் ஜடேஜாவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வாறு செயல்பட்டு இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். பந்து வீசும் போது பவுலரின் உயரம் என்பது ஒரு முக்கிய சாதகமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் உயரமான நபர் பந்து வீசும் போது பந்தின் பவுன்ஸ் அதிகமாக இருக்கும். இதன் மூலம் பேட்ஸ்மேன்கள் ஈசியாக ஸ்லிப்பில் கேட்ச் ஆக வாய்ப்பு உண்டு.
அந்த வகையில் உயரத்தில் ஜடேஜா 5.8 அங்கலமாக இருக்கிறார். ஆனால் அஸ்வின் 6.2 அங்கலமாக உயரத்தில் கூடுதலாக இருக்கிறார். ஜடேஜா 72 டெஸ்ட் போட்டிகள் தான் விளையாடி இருக்கிறார். ஆனால் அஸ்வின் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஜடஜா 294 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். ஆனால் அஸ்வின் 516 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
ஒரு இன்னிங்ஸில் சிறந்த பவுலராக ஜடேஜா ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி வெறும் 42 ரன்கள் தான் விட்டுக் கொடுத்திருக்கிறார். இதுவே அஸ்வின் சிறந்த டெஸ்ட் செயல்பாடு என்றால் 59 ரன்கள் விட்டுக் கொடுத்து ஏழு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். ஜடேஜா 13 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். ஆனால் அஸ்வின் 36 முறை 5 விக்கெட்டுகளை ஒரே இன்னிங்சில் கைப்பற்றி அசத்தி இருக்கிறார்.
ஜடஜா ஒரு டெஸ்டில் இரண்டு முறை 10 விக்கெட்டுகளை விதித்திருக்கிறார். ஆனால் அஸ்வின் ஒரே டெஸ்டில் எட்டு முறை பத்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். பேட்டிங் என்று வந்தால் இந்த இருவருமே கலக்கியிருக்கிறார்கள். இதில் ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் 3036 ரன்கள் அடித்திருக்கிறார். அஸ்வின் 3309 ரன்கள் அடித்திருக்கிறார்.
ஜடேஜா நான்கு முறை சதமும், 20 முறை அரை சதமும் அடித்து இருக்கிறார். ஆனால் அஸ்வின் ஐந்து முறை சதமும், 14 முறை அரைசதமும் அடித்திருக்கிறார். இப்படி அனைத்து விதத்திலும் ஜடேஜாவை விட அஸ்வின் தான் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். ஆனால் பெரும்பான்மையான கேப்டன்கள் ஜடேஜாவுக்கு தான் முன்னுரிமை வழங்குகிறார்கள்.
அஸ்வினுக்கு வெளிநாடுகளில் எந்த ஒரு முன்னுரிமையும் வழங்கவில்லை. இப்படி அனைத்திலும் அஸ்வின் பெஸ்டாக இருந்தாலும் அண்மையில் ஒரு பேட்டியில் தமக்கு தெரிந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த மதிப்பு மிக்க வீரர் என்றால் அது ஜடேஜா தான். ஜடேஜா என்னைவிட திறமையானவர் என்று அஸ்வின் தன்னடக்கத்துடன் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.