Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிரடி காட்டிய ஆஸ்திரேலியா.. ஒரே ஓவரில் அஸ்வின் 2 விக்கெட் வீழ்த்தி அசத்தல்.. சபாஷ் சரியான போட்டி

டெல்லி : இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடிய நிலையில், அஸ்வின் ஒர ஒவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஒரு வேகப்பந்துவீச்சாளர் மற்றும் 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது.

இந்திய அணியில் சூர்யகுமாருக்கு பதில், ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டார். நாக்பூர் டெஸ்ட் காட்டிலும், டெல்லி டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் அதிரடியாக விளையாடினர்.

கேட்ச் மிஸ்

கேட்ச் மிஸ்

வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஜோடி ஆதிக்கம் செலுத்த வேண்டிய உத்வேகத்துடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக கவாஜா பந்துகளை பவுண்டரிக்கு விரட்டுவதில் குறியாக இருந்தார். இதனையடுத்து அஸ்வின் பந்துவீச வந்ததும், கவாஜா கொடுத்த 2 கடினமான கேட்ச் வாய்ப்புகளை இந்திய வீரர்கள் தவறவிட்டனர்.

வார்னர் அவுட்

வார்னர் அவுட்

முதல் கேட்ச் ஷாட் லேக்கிலும், 2வது வாய்ப்பு ஸ்லிப் பக்கமும் சென்றது. ஆனால் இது இரண்டுமே மிகவும் கடினமான வாய்ப்பாகும். டேவிட் வார்னர் முதலில் டிஆர்எஸ் உதவியால் தப்பித்தாலும், பிறகு ஷமி பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். இதனால் வார்னர் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அஸ்வின் மேஜிக்

அஸ்வின் மேஜிக்

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 50 ரன்களை சேர்த்தது. இதனையடுத்து களமிறங்கிய லாபஸ்சேன் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விரட்டினார். ஒரு கட்டத்தில் முதல் சேஷனில் ஆஸ்திரலிய அணி 100 ரன்களை தொட்டு விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆன்ல் அப்போது தான் அஸ்வின் தனது மேஜிக்கை வெளிகாட்டினார்.

அஸ்வின் 2 விக்கெட்

அஸ்வின் 2 விக்கெட்

அஸ்வின் வீசிய ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்தது. முதலில் லாபஸ்சேன் 18 ரன்களில் ஆட்டமிழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இந்த நிலையில் ஜடேஜாவும் ஒரு விக்கெட்டை எடுக்க , டிஆர்எஸ் உதவியால் தப்பித்தனர். இதன் மூலம் மதிய நேர இடைவேளையின் போது 94 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

Story first published: Friday, February 17, 2023, 12:13 [IST]
Other articles published on Feb 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+