Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிங் இஸ் கிங் என்றால்? – அப்போ நாங்க யார்? சாதனையை துரத்தும் தமிழன்..

கான்பூர்; சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள தமிழக வீரர் அஸ்வின், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மேலும் ஒரு சாதனைகளை சமன் செய்துள்ளார்

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கான்பூர் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது,

Ashwin Picks his 417 Wickets Equals Harbhajan

இதில் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 4 ரன்களுக்கு 1 விக்கெட் எடுத்துள்ளது.முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட் எடுத்துள்ளார்.

நாளைய ஆட்டத்தில் அவர் எத்தனை விக்கெட் எடுப்பாரோ, அதை பொறுத்து தான் இந்திய அணி அமையும்.

மூன்றாவது நாள் ஆட்டமான நேற்று தொடர்ந்த சிறிது நேரத்திலேயே, நியூசிலாந்து தொடக்க வீரர் வில் யங் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இதன் மூலம் நடப்பு ஆண்டில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஷாகின் அஃபிரிடியை பின்னுக்கு தள்ளினார்.

இதனைத் தொடர்ந்து அஸ்வின் ஜேமிசனை வீழ்த்தி 415வது விக்கெட்டுகளை எடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரமை அஸ்வின் பின்னுக்கு தள்ளினார்.

தற்போது 2வது இன்னிங்சிலும் வில் யங் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் 417 விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். இதன் மூலம் இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கை (417) அஸ்வின் சமன் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது அடுத்த இலக்கு கபில்தேவை (434) பின்னுக்கு தள்ளுவதாகும். 35 வயதான அஸ்வின் இதுவரை 30 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்னும் 3 ஆண்டுகள் அஸ்வின் விளையாடினால் கும்ப்ளேவின் (619) விக்கெட் சாதனையையும் முறியடித்துவிடுவார்.

Recommended Video

India vs New Zealand 1st Test : Harbhajan சாதனையை முறியடிக்க போகும் Ashwin

இந்த நிலையில், பாகிஸ்தான் வீரர் ஷகின் அஃபிரிடி வங்கதேச டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். இன்று அவர் மீண்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் நடப்பாண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இருவரும் 42 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளனர். இதனால் முதலிடத்தை பிடிக்க இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

Story first published: Sunday, November 28, 2021, 19:03 [IST]
Other articles published on Nov 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+