எல்லோரும் கைவிட்டுவிட்டனர்.. கடைசி வரை கோலிக்காக உதவிய தமிழக வீரர் அஸ்வின்..சுவாரசிய சம்பவம்.. ப்பா
சென்னை: இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின்தான் கேப்டன் கோலிக்கு தளபதி போல மிக சிறப்பாக செயல்பட்டார். ரஹானே, ரோஹித் பெரிய அளவில் இந்த தொடரில் இந்திய அணிக்கு பங்களிப்பு அளிக்கவில்லை.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது.227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்தி உள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியில் ஐந்து நாட்களும் இங்கிலாந்து அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. இதனால் மீதம் உள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

எப்படி?
இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின்தான் கேப்டன் கோலிக்கு தளபதி போல மிக சிறப்பாக செயல்பட்டார். இந்திய அணியின் துணை கேப்டனாக ரஹானே இருக்கிறார். அதேபோல் முன்னாள் துணை கேப்டன்கள் ரோஹித், புஜாரா ஆகியோர் இருக்கிறார்கள். ஆனால் ரஹானே, ரோஹித் பெரிய அளவில் இந்த தொடரில் இந்திய அணிக்கு பங்களிப்பு அளிக்கவில்லை.

ஏன்
ஏனோ இவர்கள் கோலிக்கு பெரிய அளவில் ஆலோசனைகளை வழங்கவில்லை. தனி மரமாகவே கோலி பெரும்பாலும் முடிவுகளை எடுத்தார். முக்கியமாக பவுலிங் ரொட்டேஷன், பீல்டிங் செட்டப்பில் கோலி கொஞ்சம் கஷ்டப்பட்டார். ரூட் போன்ற ஸ்வீப் ஷாட் அடிக்கும் வீரர்களுக்கு எப்படி பீல்டிங் வைப்பது என்று தெரியாமல் தள்ளாடினார்.

வீரர்கள்
மூத்த வீரர்கள் பலரும் கோலியை கைவிட்ட போதும் கூட தமிழக வீரர் அஸ்வின் பெரிய அளவில் கோலிக்கு உறுதுணையாக இருந்தார். தமிழக வீரர் அஸ்வின்தான் பெரும்பாலும் கோலிக்கு ஆலோசனை வழங்கினார். பவுலர்கள் களைப்பாக இருந்த போதும் கூட அஸ்வின்தான் அவர்களுக்கு ஊக்கம் அளித்தார்.

அபாரம்
5 நாள் ஆட்டத்தில் மற்ற வீரர்களை விட அதிக ஓவர் வீசியதும், அதிக ஓவர் பேட்டிங் செய்ததும் அஸ்வின் மட்டுமே. கோலிக்கு மிகப்பெரிய அரணாக அஸ்வின் இந்த போட்டியில் இருந்தார் என்பதே நிதர்சனம். துணை கேப்டன் பதவி மீதெல்லாம் ஆசை இல்லை என்று ஆஸ்திரேலிய தொடரின் போது அஸ்வின் குறிப்பிட்டார். ஆனால் இங்கிலாந்து டெஸ்டில் அஸ்வின் ஒரு துணை கேப்டன் போல அபாரமாக செயல்பட்டார்.

சிறப்பு
கோலியை மற்ற வீரர்கள் கைவிட்ட போதும் அஸ்வின் தொடர்ந்து ஊக்கம் அளித்தார். இதே அஸ்வினைதான் கோலி ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் ஒதுக்கினார். ஆனால் அதை எல்லாம் மறந்து அஸ்வின் மிகவும் பெருந்தன்மையோடு செயல்படுகிறார். அஸ்வின் ஒரு காலத்தில் அவசரமாக பேசுவது, கோபம் அடைவது போன்ற கொள்கைகளை கொண்டு இருந்தார் .

ஆனால் என்ன
ஆனால் இப்போதெல்லாம் அஸ்வின் மிகவும் தெளிவாக பேசுகிறார். முடிவெடுக்கிறார். மிகவும் முதிர்ச்சியுடன் களத்தில் செயல்படுகிறார். இந்திய அணியில் உண்மையில் அஸ்வின் ஒரு லெஜண்ட் என்ற ஸ்தானத்தை எட்டிவிட்டார். இன்னும் அவருக்கு வயது இருப்பதால் எட்ட முடியாத உயரங்களை அவர் கண்டிப்பாக எட்டுவார் என்று உறுதியாக நம்பலாம்!


Click it and Unblock the Notifications