Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விதி விளையாடிவிட்டது.. பிரபல நடிகரின் கேப்டன்சியில் ஆடிய அஸ்வின்.. வெளியான தகவல்!

சென்னை : சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷாலை பேட்டி எடுத்தார் கிரிக்கெட் வீரர் அஸ்வின்.

Recommended Video

Dhoni மீண்டும் நீக்கப்பட்டார். BCCI Training campல் பெயர் இல்லை

அப்போது விஷ்ணு விஷால் கேப்டன்சியில் தான் கிரிக்கெட் ஆடியதை நினைவு கூர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் அஸ்வின்.

ஆம், துவக்க காலத்தில் நடிகர் விஷ்ணு விஷால் தீவிர கிரிக்கெட் வீரராக இருந்தார்.

அஸ்வின் பேட்டி

அஸ்வின் பேட்டி

கிரிக்கெட் வீரர் அஸ்வின் லாக்டவுன் காலத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார். பல கிரிக்கெட் வீரர்களை பேட்டி எடுத்த அவர் சினிமா பிரபலங்களையும் பேட்டி எடுத்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷாலை பேட்டி எடுத்தார்.

நடிகர் விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால் ஜீவா படத்தில் சரி கிரிக்கெட் வீரராக சிறப்பாக நடித்து இருப்பார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நல்ல திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவருடன் அதிக நாட்கள் பழகியவர் போலவே பேசத் துவங்கினார் அஸ்வின்.

விஷால்

விஷால்

முதலில் அவரை விஷால் என்றே அழைத்தார். பின்னர் அது பற்றி விளக்கம் அளித்தார். இருவரும் ஒரே கிளப் அணியில் ஆடியதாகவும், விஷ்ணு விஷால் கேப்டன்சியில் தான் ஆடியதாகவும் அப்போது அவரை விஷால் என்றே அழைப்பேன் என்றும் கூறினார்.

இந்திய அணி

இந்திய அணி

விஷ்ணு விஷால் சிறந்த வீரராக விளங்கினார். அதனால் அவர் தான் முதலில் இந்திய அணியில் இடம் பெறுவார் என்றும், அவருக்கு பின் தனக்கு இந்திய அணியில் இடம் பெறும் வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தாராம் அஸ்வின்.

மாறிய பயணம்

மாறிய பயணம்

ஆனால், விதியின் விளையாட்டால் விஷ்ணு விஷால் ஒரு கட்டத்தில் கிரிக்கெட்டை விட்டு விலகினார். அதன் பின் திடீரென நடிகராக மாறினார். மறுபுறம் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இந்திய அணியில் முன்னணி பந்துவீச்சாளராக மாறினார்.

சிறப்பான பேட்டி

சிறப்பான பேட்டி

இது பற்றி அஸ்வின் அந்தப் பேட்டியில் கூறினார். இரு பால்ய கால நண்பர்களுக்கு இடையே ஆன பேட்டி என்பதால் அந்த உரையாடல் மிக உற்சாகமாக இருந்தது. ரசிகர்கள் பலர் இந்த சமூக வலைதள பேட்டியை ரசித்து வருகிறார்கள்.

Story first published: Wednesday, July 22, 2020, 13:34 [IST]
Other articles published on Jul 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+