Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட்டில் ‘ஃப்ரீ பால்’ எனும் புதிய ரூல்ஸ்.. அஸ்வின் சொன்ன யோசனை.. பின்னணியில் மன்கட் சர்ச்சை!

மும்பை: கிரிக்கெட் ஃப்ரீ ஹிட் போல ஃப்ரீ பால் முறையை அறிமுகப்படுத்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கோரியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய ஸ்பின்னர் ஆல்ரவுண்டராக தமிழக வீரர் அஸ்வின் விளங்கி வருகிறார். அதற்கு அவரின் சாதனைகளே சான்று.

களத்தில் பந்துவீசுவதோடு நின்றுவிடாமல், தனது கருத்துக்களை மிக அழுத்தம் திருத்தமாக முன்வைப்பதிலும் அஸ்வின் தயங்குவதில்லை.

சர்ச்சையும் அஸ்வினும்

சர்ச்சையும் அஸ்வினும்

கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் மீது எழுந்த சர்ச்சைகளில் முக்கியமான ஒன்று மன்கட் அவுட் முறை. கடந்த 2019ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ராஜஸ்தான் அணி வீரர் ஜாஸ் பட்லரை மன்கட் முறையில் அவுட்டாக்கினார். அதாவது நான் ஸ்ட்ரைக்கரில் இருக்கும் பேட்ஸ்மேன், பந்துவீச்சாளரின் கையில் இருந்து பந்து வெளியேறுவதற்கு முன்னதாகவே கிறீஸை விட்டு வெளியே வரக்கூடாது அப்படி வந்தால், பவுலர் பந்துவீசுவதற்கு முன்னதாகவே அவரை ஸ்டம்ப் அவுட் ஆகிக்கொள்ளலாம். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

சஞ்சய் மன்ச்ரேக்கர் கருத்து

சஞ்சய் மன்ச்ரேக்கர் கருத்து

இந்நிலையில் அதற்காக புதிய விதிமுறையை கோரியுள்ளார் அஸ்வின். முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், மாற்றப்பட வேண்டிய கிரிக்கெட் விதிமுறைகள் குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில், ஃப்ரீ ஹிட் முறை நீக்கப்பட வேண்டும். பவுலர் ஒரு செமீ அதிகமாக கால் எடுத்து வைத்துவிட்டால் உடனே அவருக்கு நோபால் கொடுக்கப்படுகிறது. அந்த பந்திற்கு ஒரு ரன்னும் கொடுக்கப்பட்டு, கூடுதலாக ஒரு பந்தும் போடப்படுகிறது. அதிலும் பேட்ஸ்மேன் அவுட்டானால், அது அவுட்டாக கருதப்படாது. இது நியாயம் அல்ல எனக்கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து கேட்டிருந்தார்.

அஸ்வின்

அஸ்வின்

இதற்கு பதிலளித்துள்ள அஸ்வின், கிரிக்கெட்டில் ஃப்ரீ ஹிட் முறை என்பது ரசிகர்களை கவர்ந்த ஒரு முறையாக உள்ளது. எனவே அதனை விட்டுவிட்டு, ஃப்ரீ பால் என்ற முறையை பவுலர்களுக்கு சாதகமாக கொண்டு வரவேண்டும். ஒவ்வொரு முறையும் பேட்ஸ்மேன் பந்துவீசுவதற்கு முன்னதாகவே கிறீஸை விட்டு வெளியே வந்தால் அதற்கு ஃப்ரீ பால் கொடுக்கப்பட வேண்டும். மேலும், அந்த பந்தில் விக்கெட் விழுந்தால் மொத்த ஸ்கோரில் இருந்து 10 ரன்கள் குறைக்கப்பட வேண்டும் எனக்கோரியுள்ளார். மேலும், பவுலரின் கையில் இருந்து பந்து வெளியேறிய பிறகு தான் பேட்ஸ்மேன் கிறீஸுக்கு வெளியில் செல்ல வேண்டும் என்பதை நியாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து தொடர்

இங்கிலாந்து தொடர்

ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடினார். ஆனால் குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக பாதியிலேயே தொடரில் இருந்து விலகினார். தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக பிசிசிஐ-ன் பபுளில் தீவிரமாக தயாராகி வருகிறார்.

Story first published: Friday, May 28, 2021, 19:51 [IST]
Other articles published on May 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+