Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்க கோட்டைக்கு வர சொன்னியாமே?.. தமிழக வீரர் அஸ்வின் செய்த வித்தியாசமான டிவிட்.. நெத்தியடி பதிலடி!

சிட்னி: ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயினை விமர்சனம் செய்யும் வகையில் தமிழக வீரர் அஸ்வின் செய்த டிவிட் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை அதிரடி ஆட்டம் மூலம் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தக்க வைத்துள்ளது.

இந்திய டெஸ்ட் வரலாற்றில் இது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியை தி கப்பா மைதானத்தில் 33 வருடமாக எந்த அணியும் டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியது இல்லை என்ற வரலாற்றை இந்திய அணி மாற்றியுள்ளது.

டிம் பெயின்

டிம் பெயின்

இந்த தொடரில் இந்தியாவிற்கு எதிரான இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் இந்திய வீரர்களை தனது வார்த்தைகள் மூலம் தொடர்ந்து சீண்டி வந்தார். முக்கியமாக அஸ்வினை டிம் பெயின் தொடர்ந்து சீண்டி வந்தார். அடுத்த போட்டிக்கு ரெடியாக்குங்கள் என்று கிண்டல் செய்ய தொடங்கியவர் ஐபிஎல்லில் உங்களை யாருக்குமே பிடிக்காதாமே உண்மையா என்று கேட்டார்.

எப்படி

எப்படி

முக்கியமாக, கப்பாவிற்கு வாங்கள், மோதி பார்க்கலாம் என்று அஸ்வினுக்கு ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் சவால் விடுத்தார். அஸ்வின் இதற்கு அடுத்தடுத்து பதிலடி கொடுத்தார். இந்தியாவிற்கு வாங்க பெயின், அதுதான் உங்களுக்கு கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும் என்று அஸ்வின் அதிரடி பதிலடி கொடுத்தார்.

டிவிட்

டிவிட்

இந்த நிலையில் டிம் பெயினை கிண்டல் செய்யும் விதமாக அஸ்வின் டிவிட் செய்துள்ளார். அதில், கப்பாவில் இருந்து எல்லோருக்கும் மாலை வணக்கம். கப்பாவில் என்னால் ஆட முடியாமல் போனதற்கு சாரி. கப்பாவில் கடைசி டெஸ்ட் போட்டியை நடத்தியதற்கு நன்றி.

பதிலடி

பதிலடி

இந்த தொடரை நாங்கள் மறக்க மாட்டோம், என்று அஸ்வின் டிம் பெயினை டேக் செய்து டிவிட் செய்துள்ளார். கப்பாவிற்கு வர சொன்னாய், நீங்கள் சொன்னபடி வந்து போட்டியை வென்றுவிட்டோம் என்று இந்திய அஸ்வின் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

கிண்டல்

கிண்டல்

அதோடு இந்திய அணி முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்களுக்கு அவுட்டான பின் இந்திய அணி இந்த தொடரில் 4-0 என்ற கணக்கில் தோல்வி அடையும் என்று பலரும் கணித்து இருந்தனர். ரிக்கி பாண்டிங் தொடங்கி மைக்கல் வாகன் வரை பலரும் இந்திய அணி வாஷ் அவுட் ஆகும் என்று கூறி இருந்தனர். இதையும் அஸ்வின் ஷேர் செய்து கிண்டல் செய்துள்ளார்.

வைரல் டிவிட்

வைரல் டிவிட்

LHS ( not = ) RHS என்று ஷேர் செய்து இந்த தொடரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கடந்த நான்கு வாரமாக எங்களுக்கு அளிக்கப்பட்ட ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி என்று அஸ்வின் கூறியுள்ளார். கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிய கருத்துக்களை ஷேர் செய்து அஸ்வின் கிண்டல் செய்துள்ளார்.

Story first published: Tuesday, January 19, 2021, 18:38 [IST]
Other articles published on Jan 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+