Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ashwin சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? கிரிக்கெட் மூலமாக மட்டும் கோடிக் கணக்கில் வருமானம்.. விவரம்

சென்னை : சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் ஓய்வு பெற்றிருக்கிறார். தனது 38 வது வயதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அஸ்வின் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முடிவடைந்த நிலையில், இதில் அஸ்வின் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் மட்டும்தான் விளையாடி, ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.இந்த சூழலில் ஃபேர்வெல் மேட்ச் எதுவும் இன்றி அவர் விலகி இருக்கிறார்.

ravichandran ashwin ashwin retirement r ashwin

இந்த நிலையில் சென்னையில் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த அஸ்வின் கிரிக்கெட் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றிருக்கிறார். அஸ்வின் கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை செய்திருக்கிறார். குறிப்பாக ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 750 விக்கெட்டுகளுக்கு மேலாகவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறு சதமும் அஸ்வின் அடித்திருக்கிறார்.

அது மட்டும் அல்லாமல் 2011 உலகக்கோப்பை,2013 சாம்பியன் கோப்பை, ஐபிஎல் கோப்பை என அஸ்வின் அனைத்தையும் வென்றிருக்கிறார். இந்த நிலையில் கிரிக்கெட் உலகில் அஸ்வின் பல சாதனைகளை படைத்த நிலையில் கிரிக்கெட்டும் அஸ்வினுக்கு பல விஷயங்களை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் அஸ்வினின் தற்போதைய சொத்து மதிப்பு 132 கோடி அளவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அஸ்வின் ஒவ்வொரு கிரிக்கெட் போட்டிக்குமான சம்பளம் மற்றும் ஒப்பந்தம் என அதுவே பத்து கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். அது மட்டுமில்லாமல் ஐபிஎல் தொடரில் இருந்து 2018 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை அஸ்வின் ஒரு ஆண்டுக்கு 7 கோடியே 60 லட்சம் சம்பளம் வாங்கி இருக்கிறார். 2022, 2023,2024 ஆம் ஆண்டு அஸ்வின் தலா 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்று இருக்கிறார்.

2025 ஐபிஎல் ஏலத்தில் அஸ்வின் ஒன்பது கோடியே 75 லட்சம் ரூபாய் சம்பாதித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அஸ்வின் மின்தரா, ஓப்போ, கொக்கோ கோலா போன்ற நிறுவனங்களின் விளம்பர தூதராகவும் இருந்திருக்கிறார். இதன் மூலம் அஸ்வினுக்கு சுமார் 30 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. சென்னையில் அஸ்வின் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பில் வீட்டையும் கட்டியிருக்கிறார். இதேபோன்று அஸ்வின் இடம் rolls-royce மற்றும் audi q7 போன்ற சொகுசு கார்களும் இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் அஸ்வினுக்கு youtube மூலம் மாதம் 20 முதல் 30 லட்சம் ரூபாய் வருகிறது.

Story first published: Wednesday, December 18, 2024, 17:50 [IST]
Other articles published on Dec 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+