Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிரான சூத்திரம்.. ரகசியத்தை உடைத்தார் அஸ்வின்.. சாதனைக்கு இதுதான் காரணம்!

சவுத்தாம்டன்: இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக, தான் சிறப்பாக செயல்படுவது குறித்த ரகசியத்தை இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ம் தேதி சவுத்தாம்டன் நகரில் நடைபெறவுள்ளது.

இதற்காக அணி கணிப்புகள், பிட்ச்கள், வானிலை விவரங்கள் ஆகியவை தற்போது இருந்தே கணிக்கப்பட்டு வருகிறது.

 இங்கிலாந்து களம்

இங்கிலாந்து களம்

இங்கிலாந்து பிட்ச்சானது இந்திய களம் போன்று இல்லாமல் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஒன்றாகும். இங்கு பந்தில் நல்ல வேகமும், ஸ்விங்கும் ஆகும் என்பதால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் - பேட்ஸ்மேனுக்கும் இடையே கடும் போர் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கும் சூழலில் இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் கண்டிப்பாக சேர்க்கப்பட்டே ஆக வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

அனுபவ வீரர்

அனுபவ வீரர்

அணியின் ப்ளேயிங் 11ல் அஸ்வின் கண்டிப்பாக தேவைப்படுவார் என்பதற்கு காரணம், அவர் இடதுகை வீரர்களுக்கு எதிராக படைத்திருக்கும் சாதனைகள் தான். உலகில் 200 முறைக்கும் மேல் இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை எடுத்த ஒரே பவுலராக அஸ்வின் திகழ்கிறார். அவர் இதுவரை எடுத்துள்ள 409 டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்களில் 207 விக்கெட்கள் இடது கை வீரர்களது ஆகும்.

வெற்றியின் ரகசியம்

வெற்றியின் ரகசியம்

இதுகுறித்து பேசியுள்ள அஸ்வின், நான் பேட்ஸ்மேனின் இன்ஸைட் மற்றும் அவுட்சைட் என இரு எட்ஜ்களுக்கும் குறிவைத்து பந்துவீசுவதுதான் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு சிரமமாக உள்ளது. ஸ்லிப், ஷார்ட் லெக், சில்லி பாய்ண்ட் என இரு புறத்திற்கும் ஃபீல்டிங் நிறுத்தி பந்துவீசுவதால் இடதுகை பேட்ஸ்மேன்கள் சுலபமாக விக்கெட்டை பறிகொடுக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் 'அரௌண்ட் தி விக்கெட்' எனப்படும் பேட்ஸ்மேனுக்கு எதிர்புறத்தில் இருந்து வீசும் முறையில் நன்கு திசையை மாற்றி வீசுகிறேன். இதனால் பேட்டின் இரு புறங்களிலும் எட்ஜாகிறது.

 டெஸ்ட் சாம்பியன்ஷிப்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

இதே போல நியூசிலாந்து அணி குறித்து பேசிய அஸ்வின், நியூசிலாந்து அணியில் சிறப்பான வீரர்கள் உள்ளனர். இந்தியாவுடனான போட்டிக்கு முன்னதாக அவர்கள் இங்கிலாந்துடன் விளையாடும் 2 டெஸ்ட் போட்டிகள் நல்ல பயிற்சியை கொடுத்திருக்கும். எனினும் இந்திய அணி அனுபவ வீரர்களுடன் தயாராக உள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை சிறப்பாகவே செயல்பட்டுள்ளோம். அந்த நம்பிக்கையும் உதவும் எனக்கூறியுள்ளார்.

இடதுகை பேட்ஸ்மேன்கள்

இடதுகை பேட்ஸ்மேன்கள்

நியூசிலாந்து அணியில் நியூசிலாந்து அணி ஓப்பனர்கள் டேவன் கான்வாய், டாம் லாந்தம் ஆகிய இருவருமே இடது கை வீரர்கள் தான். அதே போல அஸ்வின் ப்ளேயிங் 11ல் இடம் பெற்றால் நியூசிலாந்து அணியின் கேன் ரிச்சர்ட்சன் மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோரின் அச்சுறுத்தல்களை சமாளிக்கலாம். இதுவரை கேன் ரிச்சர்ட்ஸனுக்கு எதிராக 5 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அஸ்வின் 4 முறை விக்கெட் எடுத்துள்ளார். மேலும் ராஸ் டெய்லரை 3 முறை விக்கெட் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 13, 2021, 20:47 [IST]
Other articles published on Jun 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+