For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சாதனை முறியடிப்பு எதிரொலி.. அஸ்வினுக்கு கபில்தேவ் கொடுத்த ஷாக்.. உண்மையை சொன்ன அஸ்வின்

மொஹாலி: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தமிழக வீரர் அஸ்வின் 435வது விக்கெட்டை வீழ்த்தி கபில்தேவின் சாதனையை முறியடித்தார்.

தற்போது அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் பட்டியலில் 2வது இடத்திலும், அதிக விக்கெட் வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர் பட்டியலில் அஸ்வின் 3வது இடத்திலும் உள்ளார்.

இந்த சாதனை குறித்து அஸ்வின் வழக்கம் போல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அஸ்வின் மகிழ்ச்சி

அஸ்வின் மகிழ்ச்சி

அதில், கபில்தேவ் 434வது விக்கெட் எடுத்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது. கபில்தேவ் எனக்கு சிறிய வயதில் இருந்தே மிகவும் பிடிக்கும். அவரை பார்த்து, நான் சிறு வயதில் வேகப்பந்துவீச்சாளராக தான் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினேன். தற்போது அவருடையை சாதனையை முறியடித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

கபில்தேவ் தந்த ஷாக்

கபில்தேவ் தந்த ஷாக்

நேற்று எனக்கு ஒரு பூங்கொத்து வந்தது. அதில் 435வது விக்கெட்டுக்கு வாழ்த்துகள் என்று இருந்தது. அதை யார் அனுப்பியது என்று பார்த்தால் கபில்தேவ் தான். இதனை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அவர் நமது இந்திய கிரிக்கெட்டுக்காக பல சாதனைகளை படைத்துள்ளார் என்று அஸ்வின் கூறியுள்ளார்.

கபில்தேவ் புகார்

கபில்தேவ் புகார்

இந்த நிலையில், அஸ்வின் சாதனை குறித்து பேசிய கபில்தேவ், அஸ்வினுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்பட்டதே இல்லை. கிடைத்த வாய்ப்பை வைத்து அவர் இவ்வளவு விக்கெட் வீழ்த்தியதே ஆச்சரியம் தான். அவருக்கு போதிய வாய்ப்பு கிடைத்திருந்தால், அஸ்வின் பல ஆண்டுகளுக்கு முன்பே என் சாதனையை முறியடித்து இருப்பார்.

Recommended Video

IPL 2022: Virat Kohli Shares Important News About RCB Skipper | Oneindia Tamil
500 விக்கெட்

500 விக்கெட்

என்னுடைய நேரம் முடிந்துவிட்டது. இன்னும் எதற்காக நான் அவருக்கு வழங்காமல் தொடர்ந்து 2வது இடத்திலே இருக்க வேண்டும். அஸ்வினுக்கு இப்போது 35 வயதாகி விட்டது. தற்போது அவர் தன்னுடைய அடுத்த இலக்காக 500 விக்கெட் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அவர் புத்திசாலித்தனமான வீரர், அதனால் 500 விக்கெட்டுக்கு மேல் அவர் எடுப்பார்.

Story first published: Wednesday, March 9, 2022, 14:17 [IST]
Other articles published on Mar 9, 2022
English summary
Ashwin Reveals How Kapildev gave surprise after breaking his record சாதனையை முறியடித்தன் எதிரொலி.. அஸ்வினுக்கு கபில்தேவ் கொடுத்த ஷாக்.. உண்மையை சொன்ன அஸ்வின்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+