
அஸ்வின்
இந்த நிலையில் அஸ்வின் இந்த போட்டியில் சதம் அடித்த போது நடந்த சுவாரசிய சம்பவம் ஒன்று குறித்து அஸ்வின் விளக்கி உள்ளார். அஸ்வின் சதம் அடித்த போது சிராஜ்தான் அவருடன் பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். கடைசி விக்கெட் என்பதால் இவர்கள் கவனமாக ஆடிக்கொண்டு இருந்தனர்.

எப்படி
அஸ்வின் சதம் அடிக்க வேண்டும், சிராஜ் விக்கெட் ஆக கூடாது . இதனால் சிராஜ் முடிந்த அளவு அஸ்வினுக்கு ஸ்டிரைக் கொடுத்தார். பவுலர்கள் சிறப்பாக பவுலிங் செய்து வந்தாலும் சிராஜ் அதை நன்றாக எதிர்கொண்டு ஸ்டிரைக் ரொட்டேட் செய்தார்.

பார்த்தது
இந்த நிலையில் சிராஜ் ஒவ்வொரு முறை பந்தை எதிர்கொள்ளும் போது தமிழக ரசிகர்கள் உற்சாகமாக கத்தி அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். இந்த நிலையில் தமிழக ரசிகர்கள் குறித்து ஆட்டத்தின் போதே அஸ்வினிடம் சிராஜ் பேசி இருக்கிறார். தமிழக ரசிகர்களை சிராஜ் பாராட்டி உள்ளார்.

அப்பா
அதில், நான் இதற்கு முன் இப்படி டிபன்ஸ் ஆடிய போது யாரும் பாராட்டியது இல்லை. என்னுடைய அப்பா கூட என்னை டிபன்ஸ் ஆடும் போது இப்படி பாராட்டியது இல்லை. ஆனால் சென்னை மக்கள் ஒவ்வொரு பந்துக்கும் என்னை பாராட்டுகிறார்கள். நான் கண்டிப்பாக அவுட் ஆக மாட்டேன்.

ஸ்டிரைக்
நான் உங்களுக்கு ஸ்டிரைக் கொடுப்பேன். நீங்கள் ஆடுங்கள். நீங்கள் செஞ்சுரி அடிப்பீர்கள் என்று நம்பிக்கை உள்ளது என்று அஸ்வினிடம் சிராஜ் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். சென்னை மக்களை பார்த்து சிராஜ் நெகிழ்ந்து போய் உள்ளார். இதை அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

அஸ்வின் செஞ்சுரி
அஸ்வின் செஞ்சுரி அடித்த போது அதை சிராஜ் பெரிய அளவில் கொண்டாடினார். அஸ்வினே இதை எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய சதத்தை சிராஜ் கொண்டாடிய விதம் எனக்கு சந்தோசம் கொடுத்தது என்று அஸ்வின் இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications