Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓஹோ இது தான் காரணமா.. ஜடேஜாவுக்கு பயந்து ஆஸி. செய்த காரியம்.. புட்டு வைத்த அஸ்வின்

சென்னை : இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பல அதிரடி மாற்றங்களை செய்து இருக்கிறது. பொதுவாக தொடரை தீர்மானிக்கும் போட்டியில் யாரும் வீரர்களை மாற்ற மாட்டார்கள்.

ஆனால் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி கேமரான் கிரீன் நீக்கிவிட்டு ஏகார் மற்றும் டேவிட் வார்னரை அணிக்குள் கொண்டு வந்துள்ளது .

சென்னை சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் சுழற்பந்துவீச்சாளரான ஏகாரை அணிக்குள் கொண்டு வந்ததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

யுத்திகள் மாற்றம்

யுத்திகள் மாற்றம்

ஆனால் டேவிட் வார்னர் தொடக்க வீரராக அறியப்பட்டவர். அவரை தேர்வு செய்துள்ள ஆஸ்திரேலிய அணி நடு வரிசையில் விளையாட வாய்ப்பு வழங்கியிருக்கிறது. இது சரிப்பட்டு வருமா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் இந்த மாற்றத்திற்கான காரணம் குறித்து அஸ்வின் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணி வார்னரை சேர்த்ததன் மூலம் தங்களுடைய பேட்டிங் வரிசையில் இடது கை பேட்ஸ்மன்களை அதிகமாக இடம்பெற வைத்திருக்கும் வகையில் யுத்திகளை மாற்றி இருப்பதாக அஸ்வின் கூறியுள்ளார்.

அஸ்வின் கருத்து

அஸ்வின் கருத்து

இதற்கு காரணம் இந்திய அணியில் இரண்டு இடது கை சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை எதிர்கொள்ளவே இந்த மாற்றத்தை ஆஸ்திரேலியா செய்திருப்பதாகவும் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் இந்த திட்டம் எப்படி கை கொடுக்கிறது என்பதை காண தாம் ஆவலுடன் இருப்பதாகவும் அஸ்வின் கூறியுள்ளார்.

பாராட்டு

பாராட்டு

அதேபோன்று ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட்டை பாராட்டியுள்ள அஸ்வின் ட்ராவிஸ் ஹெட் ஆப் சைடில் அடிக்கும் விதம் அவரை மிகவும் அபாயகரமான வீரராக மாற்றி விட்டதாக கூறியுள்ளார். பொதுவாக கிரிக்கெட் இலக்கணப்படி இடது கை பேட்ஸ்மேன்கள் இடது கை சுழற் பந்துவீச்சாளர்களை எளிதாக எதிர்கொண்டு ரன் சேர்க்க முடியும்.

கிரிக்கெட் இலக்கணம்

கிரிக்கெட் இலக்கணம்

இதனால் இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கும் போதெல்லாம் பொதுவாக வலது கை ஆப் பின்னர் தான் பந்து வீசுவார். இதனால் தான் இடதுகை பேட்ஸ்மேன்களை அதிக அளவில் ஆஸ்திரேலியா சேர்த்து இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது. டிராவிஸ் ஹெட் , டேவிட் வார்னர் அலெக்ஸ் கேரி என பேட்டிங் வரிசையில் முதல் ஆறு பேரில் மூன்று இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, March 22, 2023, 14:49 [IST]
Other articles published on Mar 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+