Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த அசிங்கம் தேவையா??.. அஸ்வினை சீண்டிப்பார்த்த ரசிகர்.. உடனடியாக தந்த தரமான பதிலடி.. என்ன ஆனது?

டாக்கா: வங்கதேச அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் குறித்து வம்பிழுக்கும் வகையில் கேள்வி கேட்ட ரசிகருக்கு, தரமான பதிலடியை கொடுத்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

வங்கதேச அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என ஒயிட் வாஷ் செய்து அசத்தியது. விறுவிறுப்பாக நடைபெற்ற 2வது போட்டியில் இந்தியா கடைசி நேரத்தில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

145 ரன்கள் என்ற சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி தோல்விக்கு அருகில் சென்றுவிட்ட போது, அட்டகாச பேட்டிங்கால் வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றவர் அஸ்வின் தான்.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இந்திய அணி ஒருகட்டத்தில் 74 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது. அப்போது அஸ்வின் தூண் போல நின்று 42 ரன்களை அடித்துக்கொடுத்தார். இதே போல பவுலிங்கிலும் 6 விக்கெட்களை எடுத்ததால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டது. இந்தியாவை மீண்டும் ஒருமுறை காப்பாறிவிட்டார் என பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

சீண்டிப்பார்த்த ரசிகர்

சீண்டிப்பார்த்த ரசிகர்

இந்நிலையில் இலங்கையை சேர்ந்த ஒரு ரசிகர் மட்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அஸ்வினின் ஆட்ட நாயகன் விருதை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ள அந்த நபர், இந்த விருதை நீங்கள், மொமினுல் ஹாக்யூ-க்கு தான் கொடுக்க வேண்டும். அவர் அந்த ஒரு தவறை செய்யவில்லை என்றால் இந்தியா என்ன செய்திருக்கும். நிச்சயம் 89 ரன்களுக்கு சுருண்டிருக்கும் என விமர்சித்திருந்தார். அஸ்வின் ஒரு ரன்னில் இருக்கும் போதே கொடுத்த கேட்ச்-ஐ மொமொனுல் தவறவிட்டார்.

தரமான பதிலடி

தரமான பதிலடி

இந்த கேள்வியால் கடுப்பான அஸ்வின் உடனடி பதில் கொடுத்தார். அதில், " அடக்கடவுளே,, நான் உன்னை ப்ளாக் செய்துவிட்டேன் என்று தானே நினைத்தேன். ஓ அது வேற நபரோ.. அவர் பெயர் டேனியல் அலெக்ஸாண்டர். சரி விடு, இந்தியா கிரிக்கெட்டே ஆடவில்லை என்றால் நீங்கள் இருவரும் என்ன செய்திருப்பீர்கள் என கேள்வியை கேட்டு நக்கல் அடித்திருந்தார்.

அஸ்வின் ரெக்கார்ட்

அஸ்வின் ரெக்கார்ட்

இந்திய அணியை சரிவில் இருந்து காப்பாற்றுவது அஸ்வினுக்கு இது முதல்முறை அல்ல. டெஸ்ட் அணியில் பல முறை 8வது வீரராக களமிறங்கி இந்தியாவின் ஸ்கோரை உயர்த்திக்கொடுத்துள்ளார். வங்கதேசத்துடனான முதல் டெஸ்டில் கூட அஸ்வின் மற்றும் குல்தீப்பின் பார்ட்னர்ஷிப் தான் இந்தியாவை காப்பாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, December 26, 2022, 9:30 [IST]
Other articles published on Dec 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+