Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாவ் புது ஸ்டைல்.. அணில் கும்ப்ளே அவதாரம் எடுத்த அஸ்வின்.. இனிமே லெக் ஸ்பின்!

Recommended Video

பவுலிங் ஸ்டைலை மொத்தமாக மாற்றிய அஸ்வின்- வீடியோ

சென்னை: இந்திய வீரர் அஸ்வின் தனது பவுலிங் ஸ்டைலை மொத்தமாக மாற்றி இருக்கிறார். அவர் இப்போது லெக் ஸ்பின் பவுலிங் ஸ்டைலுக்கு மாறியுள்ளார்.

பல்வேறு யோசனைக்குப் பின் இந்த பவுலிங் ஸ்டைலை அவர் மாற்றி உள்ளார். தற்போது நடக்கும் இராணி கோப்பை போட்டியில் அவர் அப்படித்தான் பந்து வீசி வருகிறார்.

கடந்த 10 வருடமாக அவர் ஒரே ஸ்டைலில் பந்து வீசி வந்தார்என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் சிலர் மட்டுமே கிரிக்கெட் உலகில் பெரிய வீரராக மாறிய பின் பவுலிங் ஸ்டைலை மாற்றுவார்கள். தற்போது அதில் அஸ்வினும் மாற்றி உள்ளார்.

சொதப்பல்

சொதப்பல்

அஸ்வின் இதுவரை பந்தை விரல் மூலமாகச் சுற்றும் பின்கர் ஸ்பின் பவுலிங் போட்டு வந்தார். இது கடிகார முள் சுழலும் திசையில் பந்தை சுழற்றும். இதன் மூலம் பந்து வேகமாகச் சுழலும். முதலில் இதன் மூலம் விக்கெட் எடுத்த அஸ்வின் கடந்த ஆண்டு மோசமாகச் சொதப்பினார்.

அணியில் இடமில்லை

அணியில் இடமில்லை

இதனால் அஸ்வினுக்கு மொத்தமாக ஒருநாள் அணியில் இருந்து முழுக்கு போடப்பட்டு இருக்கிறது. அவர் டெஸ்ட் அணிக்கான வீரர் என்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரும் ஜடேஜாவும் சென்ற இடத்தை குல்தீப், சாஹல் நிரப்பி இருக்கிறார்கள்.

3 மாதம்

இதனால் அஸ்வின் வெறும் 3 மாதத்தில் தன்னுடைய பவுலிங் ஸ்டைலை லெக் ஸ்பின்னுக்கு மாற்றி இருக்கிறார். பலருக்கும் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது அவரது கிரிக்கெட் எதிர்காலத்தை மாற்றும் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

எப்படி

எப்படி

இவரது லெக் ஸ்பின் பவுலிங் ஸ்டைல் கிட்டத்தட்ட அணில் கும்ப்ளே போலவே இருக்கிறது. அவர் நடந்து வருவது தொடங்கி, மணிக்கட்டை சுழற்றுவது வரை எல்லாமே அப்படியே அவரது ஸ்டைலில் இருக்கிறது. கொஞ்சம் பழைய அஸ்வின் ஸ்டைலும் இதில் உள்ளது.

பரவாயில்லை

பரவாயில்லை

ஆனால் அவர் போடும் பந்து அந்த அளவிற்கு சுழலவில்லை. கொஞ்சம் மட்டுமே சுழலுகிறது. இதனால் அவருக்கு இன்னும் பயிற்சி வேண்டும் என்று பலரும் தெரிவித்துள்ளார்கள்.

ஒருநாள்

ஒருநாள்

இந்திய அணியிலும் அவர் இப்படித்தான் போட இருக்கிறார். விரைவில் அவர் இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிக்காக திரும்புவார் என்று கூறப்படுகிறது. இதனால் அஸ்வினின் லெக் ஸ்பின்னை சர்வதேச போட்டிகளிலும் பார்க்கலாம்.

Story first published: Thursday, March 15, 2018, 13:46 [IST]
Other articles published on Mar 15, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+