Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீட்டிங்கில் தீயாக பேசிய அஸ்வின்.. கோலியின் புறக்கணிப்பிற்கு இதுதான் காரணம்.. கவாஸ்கர் பொளேர்!

சிட்னி: இந்திய ஒருநாள் மற்றும் டி 20 அணியில் அஸ்வின் வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட கோலியின் கோபம்தான் காரணம் என்று கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியில் தற்போது டெஸ்ட் பவுலராக மட்டுமே அஸ்வின் இருந்து வருகிறார். ஒருநாள் அணியில் அஸ்வின் பல சாதனைகளை செய்து இருக்கிறார்.

ஆனாலும் இந்திய ஒருநாள் மற்றும் டி 20 அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதே இல்லை. தொடர்ந்து இவர் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

ஸ்பின்

ஸ்பின்

இந்திய அணியில் ஸ்பின் பவுலராக சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் இரண்டு பேர் மட்டுமே இருந்து வருகிறார்கள்.குல்தீப் யாதவ் பார்ம் அவுட்டில் இருந்தால் கூட அஸ்வினுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை. அஸ்வின் எவ்வளவு சிறப்பாக ஆடினாலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை.

ஏன்

ஏன்

இந்திய ஒருநாள் மற்றும் டி 20 அணியில் அஸ்வின் வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட கோலியின் கோபம்தான் காரணம் என்று முன்னாள் வீரர் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர்.. இந்திய அணியில் அஸ்வின் மிகவும் நேர்மையான வீரர். தனது கருத்துகளை அதிரடியாக பேசுவார்.

அதிரடி

அதிரடி

அணியின் மீட்டிங்கில் இவர் அதிரடியாக தனது மனதில் பட்டதை பேசி இருக்கிறார். யாருக்கு இவர் அடங்கி போனது இல்லை. மற்ற வீரர்கள் எல்லோருக்கும் ஆமாம் என்று கருத்து சொல்வார்கள். ஆனால் அஸ்வின் அப்படி யாருக்கும் அஞ்சியது இல்லை.

நீக்கம்

நீக்கம்

இதனால்தான் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவது இல்லை. அஸ்வின் ஒரு போட்டியில் சரியாக ஆடவில்லை என்றாலும் அவருக்கு வாய்ப்பு பறிக்கப்படுகிறது. ஆனால் சில பேட்ஸ்மேன்கள் பல முறை சொதப்பினாலும் தொடர்ந்து வாய்ப்பு பெறுகிறார்கள்.

பாரபட்சம்

பாரபட்சம்

இந்திய அணியில் பாரபட்சமான சூழ்நிலை நிலவி வருகிறது என்று கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். கோலியை மறைமுகமாக விமர்சனம் செய்து கவாஸ்கர் இப்படி பேசி உள்ளார். கோலி இந்திய அணியை ஆட்டிப்படைப்பதாக கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.

Story first published: Thursday, December 24, 2020, 13:42 [IST]
Other articles published on Dec 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+