
அஸ்வின்
முதலில் அஸ்வின் சரியாக விளையாடாமல் இருந்த காரணத்தால் 1.5 வருடங்களுக்கு முன் குல்தீப் மற்றும் சாஹல் அணிக்குள் கொண்டு வரப்பட்டனர்.முதலில் இவர்கள் இந்திய அணிக்காக நன்றாகவே விக்கெட் எடுத்தனர். ஆனால் போக போக இவர்களின் மேஜிக் நீடிக்கவில்லை. முக்கியமாக குல்தீப் அதிக அளவில் அணியில் சொதப்பினார்.

இப்போது எப்படி
அதே சமயம் அஸ்வின் தொடர்ந்து புதிய பயிற்சிகளை எடுத்து வந்தார். ஆப் ஸ்பின்னுடன் சேர்த்து லெக் ஸ்பின்னும் கற்றுக்கொண்டார். ஆனாலும் இவருக்கு அணியில் மட்டும் இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் தற்போது இவர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடக்கும் கவுண்டி கிரிக்கெட்டில் கலக்கி வருகிறார் .

என்ன விக்கெட்
கவுண்டியில் நேற்று நடந்து முடிந்த போட்டியே அதற்கு உதாரணம். அஸ்வின் விளையாடிய நாட்டிங்ஹாம் அணிக்கும் சுரே அணிக்கும் இடையில் டெஸ்ட் போட்டி கடைசி வர பரபரப்பாக சென்றது. இந்த போட்டியில் அஸ்வின் பெரிய அளவில் கவனம் ஈர்த்தார்.

எவ்வளவு
முதல் இன்னிங்சில் அஸ்வின் 6 விக்கெட் எடுத்து 69 ரன்கள் கொடுத்தார். அதேபோல் அவரது அணியில் அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் 75 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் எடுத்தார். அதேபோல் அந்த அணிக்காக அதிகபட்சமாக 66 ரன்கள் குவித்தார். இந்த போட்டி முழுக்க இவர் சிறந்த ஆல் ரவுண்டராக விளையாடினார்.

வாய்ப்பு
இவரின் இந்த சிறப்பான ஆட்டம் இந்திய அணியின் தேர்வாளர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அஸ்வினின் ஆட்டம் அவரை மீண்டும் அணிக்குள் கொண்டு வர வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். குல்தீப்பிற்கு பதிலாக அஸ்வின் மீண்டும் அணியில் சேர வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இன்னும் இரண்டு நாட்களில் இதற்கான பதில் தேர்வு குழு மீட்டிங்கிற்கு பின் கிடைத்துவிடும்!


Click it and Unblock the Notifications