Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேசாம ரஹ்மானைக் கடத்திருவோமா... செய்தியாளர்களை 'ஸ்டன்' ஆக்கிய 'ஸ்பின்' அஸ்வின்!

டாக்கா: இந்தியா வெற்றி பெற வேண்டுமானால், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர், முஸ்தபிகுர் ரஹ்மானை கடத்திவிடலாமா என்று பத்திரிகையாளர்களுக்கு எதிர்க்கேள்வி கேட்டார் இந்திய வீரர் அஸ்வின்.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் இரு போட்டிகளிலும், இந்தியா பரிதாபமாக தோற்றது. இதற்கு முக்கிய காரணம், வங்கதேச இடக்கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிகுர் ரஹ்மான்.

அசத்தல் பவுலர்

அசத்தல் பவுலர்

முதல் போட்டியில் 5 விக்கெட்டுகளையும், 2வது போட்டியில் 6 விக்கெட்டுகளையும் சாய்த்து இந்திய மிடில் ஆர்டரை நிலைகுலையச் செய்தார் முஸ்தபிகுர் ரஹ்மான். களம் கண்ட முதல் இரு போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் புது உலக சாதனையையும் படைத்துள்ளார் 19 வயதான முஸ்தபிகுர் ரஹ்மான்.

நிருபர்கள் கேள்வி

நிருபர்கள் கேள்வி

இந்நிலையில், முஸ்தபிகுர் ரஹ்மானை, 3வது போட்டியில், எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள் என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அஸ்வினிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்தான் வினோதமாக இருந்தது.

கடத்தலாமா?

கடத்தலாமா?

அஸ்வின் கூறியதாவது: இதுபோன்ற பவுலர்களை சந்திப்பது எப்படி என்பது குறித்து அணி வீரர்கள் ஆலோசித்து வருகிறோம். எதிர்கொள்ள வேண்டுமானால், முஸ்தபிகுர் ரஹ்மானை கடத்திவிடலாமா? அப்படியானால் அவர் 3வது போட்டியில் விளையாட மாட்டார் அல்லவா?

மதிக்கனும்

மதிக்கனும்

முதலில் முஸ்தபிகுர் ரஹ்மான் என்ற இளம் பவுலரை அவரது திறமைக்காக மதிக்க வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்த பிறகு அதில் ஆடும் ஒரு வீரரை மதிக்க வேண்டியது அவசியம். அப்போதுதான், அந்த பவுலரை எதிர்கொள்ள வழி கிடைக்கும். இவ்வாறு அஸ்வின் தெரிவித்தார்.

Story first published: Wednesday, June 24, 2015, 14:16 [IST]
Other articles published on Jun 24, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+