Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூர்யகுமாரின் பேட்டிங் ஆர்டர் சரிதானா??.. இந்தியாவின் வெற்றியை பறித்த ஒரு முடிவு.. அஸ்வின் விளக்கம்!

சென்னை: ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார் பேட்டிங் மீது இருந்த விமர்சனங்களுக்கும், பேட்டிங் ஆர்டரில் இருந்த விமர்சனங்களுக்கும் அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இந்தியாவின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், சூர்யகுமார் யாதவ் மீதுதான் அனைவரின் கவனமும் இருந்து வருகிறது. அவரின் பேட்டிங் சொதப்பலே பின்னடைவை ஏற்படுத்தியதாக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

சூர்யகுமாரின் சொதப்பல்

சூர்யகுமாரின் சொதப்பல்

இந்த 3 போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் தொடர்ச்சியாக கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றினார். அவர் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடுவதால், 3வது போட்டியில் சூர்யகுமாரின் பேட்டிங் வரிசை மாற்றப்பட்டது. வழக்கமாக 4வது இடத்தில் களமிறங்கிய அவரை கீழே இறக்கிவிட்டு, அக்‌ஷர் பட்டேல் மேலே களமிறங்கினார். அவரை தொடர்ந்து கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் விளையாடினர். ஆனால் இந்த திட்டம் சொதப்பியது.

அஸ்வினின் விளக்கம்

அஸ்வினின் விளக்கம்

இந்நிலையில் இதுகுறித்து அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஸ்ரேயாஸ் ஐயரின் காயத்தினால் ஆஸ்திரேலிய தொடரில் 4வது இடத்திற்கு ஒரு வீரர் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அவரின் காயம் தான் சூர்யகுமாருக்கு வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது. 3 பந்துகளை சந்தித்தார் 3 முறை டக் அவுட்டானார். உடனடியாக அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆட வேண்டுமா? சரியில்லை? என விமர்சனங்கள் குவிகிறது. அதுவும் இந்தியா தொடரை இழந்தவுடன் விமர்சனங்கள் அதிகரித்துவிட்டன.

இந்திய அணி திட்டம்

இந்திய அணி திட்டம்

ஆஸ்திரேலியாவின் பேட்டிங் ஆர்டரை நன்கு பாருங்கள். மார்னஸ் லபுசாக்னே 5வது இடத்தில் தான் ஆடுவார். ஆனால் டேவிட் வார்னரால் 4வது இடத்திற்கு களமிறங்க வேண்டிய சூழல் வந்தது. ஆஸ்திரேலியா தோல்வியைடைந்திருந்தால் அது கேள்விகளை எழுப்பியிருக்கும். அதுபோன்று தான் சூர்யகுமாரும். டாப் ஆர்டரில் களமிறங்கிய அக்‌ஷர் பட்டேல், ஆஸ்திரேலியாவின் சுழற்பந்துவீச்சை ஒரு 10 ஓவர்கள் சமாளித்திருந்தால் பின் இந்தியாவுக்கு சாதகமான சூழல் வந்திருக்கும். அதன்பின் சூர்யகுமார் யாதவ் தனது அதிரடியை தொடங்கியிருப்பார்.

சரியான திட்டம்

சரியான திட்டம்

இந்திய அணியின் திட்டம் மிகச்சரியாக தான் இருந்தது. ஆனால் எதிர்பார்க்காத ரன் அவுட் காரணமாக முடிவுகள் வேறு மாதிரி ஆகிவிட்டது. எனவே ஓரிரு போட்டிகளின் முடிவை வைத்துக்கொண்டு கருத்து தெரிவிக்க வேண்டாம் என்பதை போல அஸ்வின் கூறியுள்ளார். சூர்யகுமார் யாதவ் அடுத்ததாக ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளார். அதன் மூலம் மீண்டும் தனது ஃபார்மை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, March 25, 2023, 11:35 [IST]
Other articles published on Mar 25, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+