Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பழைய டிவிட்களை கிளறி.. தேவையின்றி சர்ச்சையில் சிக்கிய அஸ்வின் மனைவி.. நெட்டிசன்களின் வம்பு!

சிட்னி: கிரிக்கெட் போட்டிகள் குறித்து சிறப்பாக கமெண்ட்களை செய்து வரும் தமிழக வீரர் அஸ்வினின் மனைவி தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளார்.

தமிழக வீரர் அஸ்வின் இந்திய கிரிக்கெட் உலகில் முக்கியமான வீரராக இருக்கிறார். கிரிக்கெட் தாண்டி இவர் யூ டியூப் சேனலிலும் கலக்கி வருகிறார்.

தன்னுடைய கிரிக்கெட் தொடர்பாக யூ டியூப் சேனலில் அஸ்வினும் அவரின் மனைவி பிரீத்தி அஸ்வினும் நடத்திய உரையாடல் பெரிய வைரலானது.

கமெண்ட்

கமெண்ட்

கிரிக்கெட் போட்டிகள் குறித்து சிறப்பாக கமெண்ட்களை செய்து வரும் தமிழக வீரர் அஸ்வினின் மனைவி தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளார். அஸ்வின் மனைவி பிரீத்தி அஸ்வின் பொதுவாக கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் போது அது குறித்து சுவாரசியமாக டிவிட் செய்வார். போட்டிக்கு வெளியே என்ன நடக்கிறது என்ற சுவாரசிய தகவல்களை பகிர்வார்.

மனைவி

மனைவி

கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் பொதுவாக மேட்ச் பார்க்க செல்வதோடு நிறுத்திவிடுவார்கள். ஆனால் பிரீத்தி அஸ்வின் லைவ் கமெண்ட்டிரி போல டிவிட்டரில் நிறைய டிவிட்களை செய்வார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரிலும் கூட பிரீத்தி அஸ்வின் செய்த டிவிட்கள் பெரிய அளவில் வைரலானது .

எப்படி

எப்படி

இந்த நிலையில் பிரீத்தி அஸ்வின் செய்த பழைய சில டிவிட்களை நெட்டிசன்கள் தேவையின்றி கிளறி வருகிறார்கள். 7-8 வருடங்களுக்கு முன் அவர் செய்த சில டிவிட்களை நெட்டின்சன்கள் தற்போது ரீடிவிட் செய்து வருகிறார்கள். அதிலும் ஒரு டிவிட்தான் சர்ச்சைக்கு காரணம் ஆகியுள்ளது.

காரணம் என்ன

காரணம் என்ன

முன்னாள் பவுலர் நெஹ்ராவை ஐபிஎல் சமயத்தில் பிரீத்தி அஸ்வின் கெட்ட வார்த்தையில் திட்டிய டிவிட் ஆகும் இது. பிரீத்தி அஸ்வின் பெரிய அளவில் வெளியே யாருக்கும் தெரியாத சமயத்தில் இப்படி டிவிட் செய்து இருக்கிறார். இதைத்தான் இப்போது நெட்டிசன்கள் தேவையின்றி கிளறி பிரச்சனை ஏற்படுத்தி வருகிறார்கள்.

பிரச்சனை

பிரச்சனை

பிரீத்தி அஸ்வின் செய்த டிவிட் சரியா தவறா என்பதை தாண்டி, தற்போது அதை தேவையின்றி கிளறுவது கேள்விகளை எழுப்பி உள்ளது. கிரிக்கெட் தொடர்பாக பலர் "இன்சைட் ஸ்டோரிகளை" பிரீத்தி அஸ்வின் வழங்கி வருகிறார். அப்படி இருக்கும் போது எப்போதோ செய்த டிவிட்களை கிளறுவது பெரிய சர்ச்சையாகி உள்ளது.

Story first published: Monday, February 1, 2021, 14:13 [IST]
Other articles published on Feb 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+