Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுதான் பிளான்.. 8 மணி நேரம் வீடியோ பார்த்த அஸ்வின்.. தமிழக ஜாம்பவானின் அசர வைக்கும் திட்டம்!

சென்னை: ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் பின்பு எப்படி திட்டங்களை வகுப்பேன் என்று தமிழக வீரர் அஸ்வின் பேட்டி அளித்துள்ளார். தன்னுடைய புதிய பார்மிற்கு காரணம் என்ன என்றும் அவர் விளக்கி உள்ளார்.

மிகவும் பரபரப்பாக சென்ற அகமதாபாத்தில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்தியா தூசி தட்டியுள்ளது. இந்திய அணியின் ஸ்பின் பவுலர்கள் நேற்று சிறப்பாக பந்து வீசினார்கள்.

10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை இந்திய அணி எளிதாக வீழ்த்தி உள்ளது. இதனால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

மூன்றாவது டெஸ்ட்

மூன்றாவது டெஸ்ட்

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி வெற்றிக்கு பின் அஸ்வின் அளித்த பேட்டியில், அதில் ஆஸ்திரேலியாவில் இருந்த பார்மை தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆஸ்திரேலியாவில்தான் வீரர்களின் வீடியோக்களை பார்த்து ஆட தொடங்கினேன். ஒவ்வொரு வீரரும் எப்படி ஆடுகிறார்கள் என்று பார்த்தேன்.

8 மணி நேரம்

8 மணி நேரம்

மொத்தமாக 8 மணி நேரம் வீடியோக்களை பார்த்தேன். ஒவ்வோர் வீரரும் எங்கே சொதப்புகிறார் என்பதை வீடியோவாக பார்த்தேன். இதுதான் எனக்கு சாதகமாக மாறியது. நான் புதிய விஸ்வரூபம் எடுக்க காரணமாக இருந்தது.

வீடியோ

வீடியோ

நான் ஏன் இப்படி வீடியோ பார்த்தேன் என்று தெரியவில்லை. ஆனால் நான் எங்கும் தவறு செய்ய கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். இதற்கு முன்பும் நான் வீடியோ பார்த்து வீரர்களின் ஆட்டங்களை கணித்து இருக்கிறேன், ஆனால் இப்போதெல்லாம் 7-8 மணி நேரம் இப்படி வீடியோக்களை பார்க்கிறேன்.

பேட்ஸ்மேன்

பேட்ஸ்மேன்

இதனால் ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் எதிராக திட்டங்களை வகுக்க எளிதாக முடிந்தது. முக்கியமாக ஒவ்வொரு பிட்சிலும் வீரர்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பதை கவனமாக பார்த்தேன். இதுதான் தற்போது என்னுடைய பார்மிற்கு முக்கிய காரணம் என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Saturday, February 27, 2021, 11:12 [IST]
Other articles published on Feb 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+