Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பட்ட கஷ்டம் வீண் போகல... இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அசத்தல்... அஸ்வினுக்கு ஐசிசி அளித்த கவுரம்

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஐசிசி புதிய அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்ல ரவிச்சந்திரன் அஸ்வின் பெரும் உதவியாக இருந்தார். மேலும் அவர் அதில் பல்வேறு சாதனைகளை படைத்திருந்தார்.

இந்நிலையில் ஐசிசி சார்பில் வழங்கப்படும் விருதிற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

என்ன விருது?

என்ன விருது?

சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீரர்களை மாதந்தோறும் தேர்வு செய்து ஐசிசி சிறப்பித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் வென்றிருந்தார். இந்நிலையில் இந்த மாதத்திற்கான விருதை பெறும் வீரரின் பெயர் வெளியாகியுள்ளது.

ரேஸில் முந்தியது யார்?

ரேஸில் முந்தியது யார்?

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், இந்திய அணியின் ஆல் ரவுண்டர் அஷ்வின், வெஸ்ட் இண்டீஸ் அணியின் காய்லே மேயர்ஸ் ஆகிய வீரர்களை ஐசிசி பரிந்துரைத்திருந்தது. அதன்படி ஆன்லைன் மூலமாக வீரர்களுக்கு கிடைக்கும் வாக்குகளை பொறுத்து முடிவு அறிவிக்கப்படும். இந்நிலையில் இந்த ரேஸில் ரவிச்சந்திரன் அஸ்வின் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அசத்தல்

அசத்தல்

இங்கிலாந்துக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 22 விக்கெட்களை எடுத்துள்ளார். பேட்டிங்கில் ஒரு சதத்தையும் அஸ்வின் விளாசியுள்ளார்.

சாதனை படைத்தார்

சாதனை படைத்தார்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், அஸ்வினுக்கு தொடர் நாயன் விருது அளிக்கப்பட்டது. மேலும் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலிலும் அஸ்வின் 2ம் இடம் பிடித்தார். இதே போல சர்வதேச டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 400 விக்கெட்களை எடுத்துவர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். முதல் இடத்தில் முத்தையா முரளிதரன் உள்ளார்.

Story first published: Tuesday, March 9, 2021, 21:21 [IST]
Other articles published on Mar 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+