Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வினுக்கு உலகக்கோப்பையில் வாய்ப்பு அளிக்க வேண்டும்.. கம்பீர் ஆதரவு.. வாய்ப்பு கிடைக்குமா?

டெல்லி : இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், சுழற் பந்துவீச்சாளர் அஸ்வினை உலகக்கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

அஸ்வின் கடந்த ஓராண்டாக இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைக்காமல் இருக்கிறார். இந்நிலையில் அஸ்வினை ஒருநாள் அணியில் சேர்த்து இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பைக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கம்பீர் கூறியுள்ளார்.

அணியில் பறிபோன இடம்

அணியில் பறிபோன இடம்

கேப்டன் கோலியின் வரவுக்கு பின் சில காலம் கழித்து, தோனியின் நம்பிக்கைக்குரிய அஸ்வின் மற்றும் ஜடேஜா அணியில் இருந்து நீக்கப்பட்டு, சாஹல் மற்றும் குல்தீப் அணியில் சேர்க்கப்பட்டனர்.

ஃபிங்கர் ஸ்பின்னர் அஸ்வின்

ஃபிங்கர் ஸ்பின்னர் அஸ்வின்

இந்த மாற்றத்துக்கு காரணம் ஜடேஜா, அஸ்வின் இருவரும் ஃபிங்கர் ஸ்பின்னர்கள். சாஹல், குல்தீப் இருவரும் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் என கூறப்பட்டது. ஜடேஜா நீண்ட காலம் கழித்து ஆசிய கோப்பையில், அக்சர் பட்டேல் காயம் காரணமாக அணிக்குள் நுழைந்தார்.

அஸ்வின் நல்ல ஸ்பின்னர்

அஸ்வின் நல்ல ஸ்பின்னர்

ஆனால், அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார். அங்கும் அவருக்கு ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவிடம் இருந்து அவரது இடத்திற்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அஸ்வின் நல்ல ஸ்பின்னர், அவர் ஃபிங்கர் ஸ்பின்னர் என்பது முக்கியமில்லை என கூறியுள்ளார் கம்பீர்.

இடம் கிடைப்பது கடினம்

இடம் கிடைப்பது கடினம்

கம்பீர் இப்போது ஆதரவு அளித்து பேசினாலும், அஸ்வின் இந்திய அணியில் இனி இடம் பிடிப்பது மிக மிக கடினம். டெஸ்ட் அணியில் கூட அவருக்கு காயம் ஏற்பட்டது என்ற காரணத்தால் உடற்தகுதியை சரியாக பார்த்துக் கொள்வதில்லை என கூறப்பட்டு வருகிறது.

Story first published: Wednesday, January 23, 2019, 17:51 [IST]
Other articles published on Jan 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+