லண்டன்: ஆர். அஸ்வினை ஒதுக்கி வைத்து விட்ட ரிஸ்க் எடுத்து கையைச் சுட்டுக் கொண்டுள்ளார் கேப்டன் விராத் கோஹ்லி. இந்தியாவின் பந்து வீச்சை கிழித்தெடுத்து விட்டது இலங்கை தனது சேஸிங்கில்.
பாகிஸ்தானுடன் நடந்த முதல் போட்டியிலும் அஸ்வின் ஆடவில்லை. அவருக்குப் பதில் ஜடேஜாவை சேர்த்திருந்தார் கோஹ்லி. நல்ல வேளையாக அப்போட்டியில் சிறப்பான வெற்றியை இந்தியா பெற்றதால் கோஹ்லியின் முடிவு சர்ச்சையாகவில்லை.

ஆனால் இன்றைய இலங்கைக்கு எதிரான போட்டியிலும் அஸ்வின் இல்லை என்று அறிவிக்கப்பட்டதால் லேசாக புகைய ஆரம்பித்தது. தற்போது இலங்கையிடம் மோசமான முறையில் இந்தியா தோல்வியைத் தழுவியிருப்பதால் அஸ்வின் சேர்க்காமல் விடப்பட்டது சர்ச்சையாகியுள்ளது.
இன்றைய போட்டியிலேயே அஸ்வின் இருந்திருக்க வேண்டும். இருந்திருந்தால் நிச்சயம் திருப்புமுனையைக் கொடுத்திருக்க முடியும். இலங்கைக்கு எதிராக அஸ்வினிடம் நல்ல ரெக்கார்டு உள்ளது. அதை கோஹ்லி கணிக்கத் தவறி விட்டார்.
இன்றைய போட்டியில் இலங்கை தனது சேஸிங்கை மிக மிக நேர்த்தியாக, திட்டமிட்டு நடத்தியது. இந்திய பந்து வீச்சை ஒன்றுமில்லாமல் செய்து விட்டனர். ஒரு வேளை அஸ்வின் இருந்திருந்தால் இந்த அளவுக்கு போயிருக்க வாய்ப்பில்லாமல்
போயிருக்கலாம்.