Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன சொன்னீங்க?.. ஒவ்வொரு பந்திலும் கோபம்.. அதே இடத்தில் அஸ்வின் அனுப்பிய மெசேஜ்.. செம பதிலடி!

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஸ்பின் பவுலிங் பிட்சில் எப்படி ஆட வேண்டும், எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்று அஸ்வின் நிரூபித்து இருக்கிறார். மோசமான பிட்சில் சதம் அடித்து அஸ்வின் அசத்தி உள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி மீண்டும் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 9 விக்கெட்டை இழந்து 276 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்தை விட இந்திய அணி 471ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது. அஸ்வின், சிராஜ் இருவரும் அதிரடியாக களத்தில் ஆடி வருகிறார்கள்.

இங்கிலாந்து

இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் அஸ்வின் 5 விக்கெட் எடுத்தார். இவர் திறமையாக பவுலிங் செய்து 5 விக்கெட் எடுத்தார். ஆனாலும் இவர் விக்கெட் எடுக்க ஸ்பின் பிட்ச்தான் காரணமாக இருந்தது என்று கூறப்பட்டது.பிட்சை பயன்படுத்தி விக்கெட் எடுத்துவிட்டார் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

விமர்சனம்

விமர்சனம்

ஆனால் இந்த விமர்சனங்களை அஸ்வின் நிராகரித்து இருந்தார். பிட்ச் காரணமாக விக்கெட் விழவில்லை. பந்தை சரியாக பயன்படுத்திய காரணத்தால்தான் விக்கெட் விழுந்தது. ஸ்பின் என்பது கலை. பிட்சை வைத்து மட்டும் பவுலிங் செய்ய முடியாது.

எப்படி

எப்படி

பிட்சை குறை சொல்லிக்கொண்டு இருக்க கூடாது, என்று கடுமையாக குறிப்பிட்டு இருந்தார். சென்னை பிட்ச் பேட்டிங் செய்ய வசதியாக இல்லை என்று இங்கிலாந்து வீரர்கள் கூறியதே இதற்கு காரணம் ஆகும். இந்த நிலையில் அதே பிட்சில் தற்போது அஸ்வின் தரமான பதிலடி கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

ஸ்பின் பிட்சில் எப்படி ஆட வேண்டும் என்று அஸ்வின் இங்கிலாந்து வீரர்களுக்கு பாடம் எடுத்து இருக்கிறார். அதிலும் இவர் லீச், மொயின் இருவரையும் எதிர்கொண்ட விதம் உண்மையில் சிறப்பாக இருந்தது . இவர் ஒவ்வொரு முறையும் பவுண்டரி அடிக்கும் போது கோலியே மெய்மறந்து பார்த்துக் கொண்டு இருந்தார்.

அஸ்வின் ஸ்டைல்

அஸ்வின் ஸ்டைல்

அஸ்வினின் ஸ்டைலான ஆட்டத்தை பார்த்து வியந்து போய் பார்த்துக் கொண்டு இருந்தார். இந்திய பிட்ச் மீது குறை சொல்லி இங்கிலாந்து வீரர்கள் காரணம் சொல்லிக்கொண்டு இருந்தனர். ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அஸ்வின் தற்போது பேட்டிங் மூலம் இங்கிலாந்து வீரர்களுக்கு வலுவான மெசேஜ் அனுப்பி உள்ளார்.

சதம்

சதம்

மிகவும் அதிரடியாக ஆடிய அஸ்வின் தற்போது சதம் அடித்துள்ளார். சர்வதேச அளவில் இவரின் சதம் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அஸ்வின் மீது கோலி வைத்த நம்பிக்கைக்கு இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

Story first published: Monday, February 15, 2021, 15:26 [IST]
Other articles published on Feb 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+