
எப்படி
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். இன்று இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் இறங்கிய போதே அஸ்வின்தான் முதல் ஓவரை வீசினார். தொடக்கத்தில் இருந்தே அஸ்வின் தனது பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தினார்.

பிட்ச்
முக்கியமாக சென்னை பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு மிகவும் சாதகமாக இருந்தது. சென்னை பிட்ச் இந்த முறை செம்மண் வைத்து தயாரிக்கப்பட்டு இருந்தது. அதிலும் பிட்ச் 3வது நாளுக்கு பின் ஸ்விங் ஆகும் வகையில் பிட்ச் உருவாக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்திய அணிக்கு இது உதவி வருகிறது.

ஸ்விங்
இந்த செம்மண் பிட்சை நன்றாக பயன்படுத்தி அஸ்வின் சிறப்பாக பவுலிங் செய்தார். பந்து நன்றாக ஸ்விங் ஆகிறது. அதேபோல் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகி வருகிறது. இதை பயன்படுத்திக் கொண்டு அஸ்வின் சிறப்பாக பவுலிங் செய்தார்.

விக்கெட்
இதன் மூலம் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை அஸ்வின் எளிதாக எடுத்தார். மூன்று விக்கெட்டும் பவுன்ஸ் ஆகி வந்த ஸ்விங் பால் மூலம் விழுந்த விக்கெட் ஆகும். செம்மண்ணை பயன்படுத்தி அஸ்வின் நன்றாக பந்தை பவுன்ஸ் செய்ய வைத்து விக்கெட் எடுத்தார்.

அஸ்வின்
அஸ்வின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட் எடுத்தார். இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சிலும் இதுவரை 3 விக்கெட் எடுத்துள்ளார். இதனால் இந்திய அணிக்கு 400-450 ரன்களை இலக்காக வைக்க வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications