தவிர்க்கவே முடியாது.. அதிரடி பவுலிங்கால் கோலிக்கு நெருக்கடி கொடுக்கும் தமிழக வீரர்.. செம பின்னணி
சிட்னி: இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வின் தற்போது தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்து உள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி விளையாடும் கிரிக்கெட் தொடர் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மாஸ் வெற்றிபெற்றது. இந்திய அணியின் வெற்றிக்கு பவுலர்களின் சிறப்பான பவுலிங்தான் காரணமாக பார்க்கப்படுகிறது.

எப்படி
தனது சிறப்பான பவுலிங் மூலம் இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வின் தற்போது தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்து உள்ளார். டெஸ்ட் அணியில் அஸ்வின் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 3 விக்கெட், இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் என்று அஸ்வின் அசத்தினார்.

புதிய பந்து
புதிய பந்து, பழைய பந்து என்று இரண்டிலும் அஸ்வின் மிகவும் சிறப்பாக பந்து வீசினார். ஆஸ்திரேலிய மண்ணில் ஸ்பின் பவுலர்கள் தற்போது திணறி வரும் நிலையில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஆஸ்திரேலியாவின் கிறிஸ் லைன் சரியாக ஸ்பின் பவுலிங் வீச முடியாமல் கஷ்டப்பட்டு வரும் நிலையில், அஸ்வின் மிகவும் எளிதாக பவுலிங் செய்கிறார்.

சிறப்பு
ஆஸ்திரேலிய மண்ணில் மட்டுமின்றி, மற்ற சர்வதேச தளங்களிலும் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி வருகிறார் . தற்போது டெஸ்ட் பவுலர்களுக்கான ஐசிசி ரேங்கிங்கில் டாப் 10ல் இருக்கும் ஒரே ஸ்பின் பவுலர் அஸ்வின் மட்டுமே. அந்த அளவிற்கு சர்வதேச அளவில் அஸ்வின் பவுலிங் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.ஆனால் ஒருநாள் மற்றும் டி 20 அணியில் அஸ்வின் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

ஒருநாள்
தற்போது இந்திய ஒருநாள் அணியில் சாஹல் மட்டுமே முழு நேர ஸ்பின் பவுலராக இருக்கிறார். இப்படி குல்தீப் யாதவ் பார்ம் இன்றி கஷ்டப்பட்டு வருகிறார். இந்த நிலையில் அஸ்வினை குல்தீப் யாதவிற்கு மாற்றாக ஒருநாள் மற்றும் டி 20 அணியில் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் எழ தொடங்கி உள்ளது. இந்திய அணியில் விரைவில் தவிர்க்கவே முடியாத வீரராக அஸ்வின் உருவெடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications