Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கலக்கினார் அஸ்வின்.... தொடரும் குக் சோதனை

Recommended Video

அலிஸ்டர் குக்கை 8வது முறையாக வீழ்த்தி சாதனைபடைத்த அஸ்வின்- வீடியோ

பிர்மிங்காம்: இந்தியா, இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கலக்கலாக பந்துவீசி, தன்னுடைய அனுபவத்தை வெளிப்படுத்தினார். அலிஸ்டர் குக்கை 8வது முறையாக ஆட்டமிழக்கச் செய்தார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. முதல் நாளில் இந்தியாவின் பந்து வீச்சில், குறிப்பாக அஸ்வினின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து திணறியது.

Ashwin spins out cook for the 8th time

முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்தியத் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் அலிஸ்டர் குக்கை முதலில் வீழ்த்தினார் அஸ்வின். இதன் மூலம் 8வது முறையாக குக்கை அவர் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரை அதிகபட்சமாக 9 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார் அஸ்வின்.

இதைத் தவிர ஆசியாவுக்கு வெளியே, டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை சுழற்பந்து வீச்சாளர் வீழ்த்துவது, 2007க்குப் பிறகு இதுவே முதல் முறையாகும். 2007ல் ஆஸ்திரேலியாவில் பில் ஜாக்சை சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே வீழ்த்தினார். நேற்றைய ஆட்டத்தில் குக்கை அஸ்வின் வீழ்த்தினார்.

Story first published: Thursday, August 2, 2018, 9:55 [IST]
Other articles published on Aug 2, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+