Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

37 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் மட்டுமே எடுத்த அஸ்வின்.. தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. ஆபத்து ?

டாக்கா : வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங்,பந்துவீச்சு என இந்தியா கலக்கினாலும், ஒரு விசயம் மட்டும் தான் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்ட் போட்டியில் என்ன தான் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டாலும், பந்துவீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினால் தான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

அப்படி இந்திய அணி 20 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்றால், அதற்கு அஸ்வினின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்க வேண்டும்.

பவுலிங்கே முக்கியம்

பவுலிங்கே முக்கியம்

அஸ்வின் என்ற பேட்ஸ்மேனை விட அஸ்வின் என்ற சுழற்பந்துவீச்சாளர் தான் அணிக்கு மிகவும் முக்கியம். ஏனென்றால் விக்கெட் எடுக்க முடியாத சூழலில் கூட அஸ்வின் தன்னுடைய யுத்திகளை பயன்படுத்தி விக்கெட்டை வீழ்த்துவார். இதனால் தான் அஸ்வினை கிரிக்கெட் சையின்டிஸ்ட் என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.

விமர்சனம்

விமர்சனம்

ஆனால் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அஸ்வினின் பந்துவீச்சு சுத்தமாக எடுப்படவில்லை. குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் பட்டேலுக்கு விக்கெட்டுகள் விழுந்த நிலையில், அஸ்வின் ஒரு விக்கெட் எடுக்க பல ஓவர்கள் வீச வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வளவு ஏன் பலரும், குல்தீப் யாதவ்க்கு பந்து வீச முன்பே ராகுல் வாய்ப்பு கொடுத்திருந்தால், வங்கதேசம் 300 ரன்கள் தாண்டி இருக்காது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

நெருக்கடி

நெருக்கடி

இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு போக வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஐந்தில் 4 டெஸ்டில் வெல்ல வேண்டும். போட்டி டிராவானால் கூட வாய்ப்பு இருக்காது. இதனால் அஸ்வின் என்ற மாயஜால சுழற்பந்துவீச்சாளர் தன்னுடைய ஃபார்மை மீட்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.

இடத்திற்கு ஆபத்து

இடத்திற்கு ஆபத்து

இந்த நிலையில் ஆஸ்திரேலியா தொடருக்கு ஜடேஜா வந்துவிடுவார். அப்போது, ஜடேஜா , அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் என்று போட்டி கடுமையாக இருக்கும். ஆனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 3 பேருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும். இதனால் அஸ்வின் இவ்வாறு தொடர்ந்து விக்கெட் எடுக்க சிரமப்பட்டால் , இந்திய அணியில் அவருடைய இடத்திற்கு ஆபத்து ஏற்படலாம். இதனால் அஸ்வின் கொஞ்சம் யூடியூப் பிஸ்னலை ஓரங்கட்டிவிட்டு, கொஞ்சம் ரஞ்சியில் விளையாடியாவது ஃபார்மை மீட்கலாம்.

Story first published: Sunday, December 18, 2022, 19:11 [IST]
Other articles published on Dec 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+