Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

25 நிமிடத்தில் நடந்த மாற்றம்.. இது கொஞ்சம் கூட சரியில்லை.. அஸ்வினுக்கு சென்ற எச்சரிக்கை.. பின்னணி

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக தமிழக வீரர் அஸ்வின் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்.

Recommended Video

இந்த தவறை மட்டும் சரிசெய்ய வேண்டும்.. தொடர் பயிற்சியில் ஈடுபட்ட Ashwin

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1 -1 என்று சமன் செய்துள்ளது.

முக்கியமாக இந்திய அணியின் வெற்றிக்கு இன்று அஸ்வின் முக்கிய காரணமாக இருந்தார். மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நாளை மறுநாள் நடக்க உள்ளது.

பயிற்சி

பயிற்சி

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக தமிழக வீரர் அஸ்வின் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார். அகமதாபாத் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்ற மைதானம் என்பதால் மீண்டும் அதிக விக்கெட்டுகளை எடுக்கும் வகையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது பிங்க் பால் போட்டியாகும்.

பிங்க் பால்

பிங்க் பால்

இதனால் பிங்க் பாலில் தற்போது அஸ்வின் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அஸ்வின் ஓடி வந்து பவுலிங் செய்யும் போது அவர் லேண்டிங் செய்வதில் சில தவறுகளை செய்து வருகிறார். நேற்று பயிற்சியில் அஸ்வின் இந்த தவறுகளை செய்து இருக்கிறார்.

பவுண்டரி

பவுண்டரி

இதனால்தான் இரண்டாவது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் கொஞ்சம் பவுண்டரிகளை கொடுத்தார். இதை மாற்றிக்கொள்ளும்படி அஸ்வினுக்கு அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது. இதை தொடர்ந்து 20-25 நிமிடம் அஸ்வின் தொடர்ந்து ஓடி வந்து பவுலிங் செய்ய லேண்டிங் செய்வது போல பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார்.

பயிற்சி

பயிற்சி

இந்த பயிற்சியை தொடர்ந்து அஸ்வினின் லேண்டிங் பிரச்சனை மாறி உள்ளது. ஆனால் இதே தவறை அவர் போட்டியின் போது செய்தால் அது நோ பாலாக செல்ல வாய்ப்புள்ளது. இதனால் மிகவும் கவனமாக பவுலிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் அஸ்வின் இருக்கிறார்.

Story first published: Monday, February 22, 2021, 17:36 [IST]
Other articles published on Feb 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+