Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆடு மாமா.. ஆளுக்கு 10 பால் ஆடலாம்.. ஆஸி. கனவை காலி செய்த அஸ்வினின் "தமிழ்".. தரமான சம்பவம்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் தொடர்ந்து தமிழில் பேசி திட்டங்களை வகுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. பரபரப்பான கட்டத்தில் செல்லும் ஆட்டம் டிராவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

ஐந்தாவது நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவின் அதிரடி பவுலின்கிற்கு எதிராக இந்திய அணி பேட்ஸ்மேன்கள் போராடும் விதம் பலரையும் கவர்ந்து உள்ளது. அஸ்வின் - விஹாரியின் ஆட்டம் ஆஸ்திரேலியாவின் வெற்றிபெறும் கனவை கலைத்துள்ளது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் தொடர்ந்து தமிழில் பேசி திட்டங்களை வகுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் டெயில் எண்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்தி எளிதாக வெல்லலாம் என்று ஆஸ்திரேலியா கனவு கண்டது. ஆனால் ஆஸ்திரேலியாவின் கனவை அஸ்வின் - விஹாரி ஜோடி கலைத்தது.

அஸ்வின்

அஸ்வின்

அதோடு அஸ்வின் களத்தில் நிற்கும் போது சக வீரர் விஹாரியிடம் அஸ்வின் தமிழில் பேசினார். ஆந்திராவை சேர்ந்த விஹாரிக்கு தமிழ் தெரியும் என்பதால் அஸ்வின் அவரிடம் முழுக்க முழுக்க தமிழில் பேசினார். மாமா.. இப்படியே ஆடு மாமா என்று கூறினார். விஹாரி காயம் காரணமாக கொஞ்சம் கஷ்டப்பட்டார்.

தமிழில் ஊக்கம் அளித்தார்

தமிழில் ஊக்கம் அளித்தார்

அவருக்கு அஸ்வின்தான் தமிழில் ஊக்கம் அளித்தார். மாமா ஆளுக்கு பத்து பால் ஆடலாம். கொஞ்சம் ஓவர்தான் இருக்கு. பால் உள்ள வராது. கவலைப்படாம ஆடு என்று தமிழில் ஊக்கம் அளித்தார். ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ந்து இந்திய வீரர்களை ஸ்லெட்ஜ் செய்து கிண்டல் செய்து வந்தனர்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் அஸ்வின் தொடர்ந்து தமிழில் விஹாரியிடம் பேசி அவரை ஊக்கப்படுத்தி ஆட வைத்தார். ஒவ்வொரு பந்திற்கும் முன் பவுலர்களை கணித்து அஸ்வின் விஹாரிக்கு தமிழில் க்ளூ கொடுத்தார். அஸ்வினின் இந்த தமிழ் வைரலாகி உள்ளது. அஸ்வினின் நிதானமாக திட்டமிடல் மற்றும் ஆட்டம் பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளது.

Story first published: Monday, January 11, 2021, 12:47 [IST]
Other articles published on Jan 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+