எனக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்குமா என்று இருந்தேன்.. ஆட்டநாயகன் அஸ்வின்.. தமிழில் பேசி உருக்கம்!
சென்னை: சேப்பாக்கத்தில் உட்கார்ந்துதான் நான் போட்டிகளை பார்த்து இருக்கிறேன், தற்போது இதே மைதானத்தில் என்னை ஹீரோ போல பார்க்கிறார்கள் என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்று அஸ்வின் முக்கிய காரணமாக இருந்தார்.
முதல் இன்னிங்சில் 5 விக்கெட், இரண்டாவது இன்னிங்சில் இவர் 3 விக்கெட் எடுத்து கலக்கினார். அதோடு இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்து அசத்தி உள்ளார்.

அஸ்வின்
இந்த நிலையில் ஆட்டநாயகன் அஸ்வின் அளித்த பேட்டியில், சேப்பாக்கத்தில் உட்கார்ந்துதான் நான் போட்டிகளை பார்த்து இருக்கிறேன். நான் இங்கெல்லாம் ஆடுவேனா என்று சந்தேகம் இருந்தது. இந்திய அணிக்காக ஆடுவேனா என்பதே சந்தேகமாக இருந்தது. அதிலும் சென்னையில் ஆடுவது என்பது எல்லாம் கனவாக இருந்தது .

எப்படி
நான் இங்கு உட்கார்ந்து போட்டிகளை பார்த்தேன், தற்போது இதே மைதானத்தில் ஆடுகிறேன். சேப்பாக்கத்தில் ஆட முடியுமா என்று நினைத்து இருக்கிறேன். தற்போது இதே மைதானத்தில் என்னை ஹீரோ போல நடத்தினார்கள்.

சூப்பர்
நான் கேப் கழட்டினால், பவுலிங் போட வந்தால் எனக்கு பெரிய அளவில் கரகோஷம் கொடுத்தார்கள். சென்னை ரசிகர்கள் உண்மையில் பெரிய அனுபவம் கொண்ட புத்திசாலி ரசிகர்கள். சென்னையில் இதுவரை நான் நான்கு முறை டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கிறேன்.

நன்றி
என்னை பொறுத்தவரை இதுதான் சிறந்த டெஸ்ட் போட்டி. சென்னை மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். சொந்த மண்ணில் என்னை ஹீரோ போல பார்ப்பது எனக்கு சந்தோசம் கொடுக்கிறது. சென்னை மக்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன், என்று அஸ்வின் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications