For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வின் அசத்தல் பவுலிங்.. 200 விக்கெட்களை வீழ்த்தினார்.... கோஹ்லிக்கும் பெருமை!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் கோஹ்லி கேப்டன்சியில் மிகவும் குறைந்த டெஸ்ட்களில் 200 விக்கெட்களை வீழ்த்திய பெருமையை பெற்று

பிர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதனால் கோஹ்லிக்கு பெருமை சேர்ந்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிர்மிங்ஹாமில் நடக்கிறது. போட்டியின் மூன்றாவது நாளான இன்று இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடுகிறது.

Ashwin took 200 test wickets under kohli captaincy

இதில் மூன்று விக்கெட்களை வீழ்த்தினார் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். இதன் மூலம் ஒரு கேப்டன் கீழ் 200 விக்கெட்கள் வீழ்த்தியோர் பட்டியலில் அஸ்வின் சேர்ந்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் கோஹ்லியின் கீழ் விளையாடியுள்ள 34வது போட்டியில் 200 விக்கெட்களை அஸ்வின் வீழ்த்தியுள்ளார்.

ஒரு கேப்டன் கீழ் மிகவும் குறைந்த டெஸ்ட்களில் 200 விக்கெட்கள் வீழ்த்தியோர் பட்டியலில் இலங்கையின் ஜெயசூர்யா கேப்டனாக இருந்தபோது, முத்தையா முரளிதரன் 30 டெஸ்ட்களில் இந்த சாதனையைப் புரிந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் தலைமையில் ஷேன் வார்னே மற்றும் தற்போது கோஹ்லி தலைமையில் அஸ்வின் 34 போட்டிகளில் 200 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

Story first published: Friday, August 3, 2018, 16:53 [IST]
Other articles published on Aug 3, 2018
English summary
Ashwin took 200 test wickets under virat kohli captaincy.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+