அதிரடி காட்டிய அஸ்வின்.. கும்மாங்குத்து விட்ட உமேஷ் யாதவ்.. நிலை குலைந்த ஆப்கானிஸ்தான்
Recommended Video

அதிரடி காட்டிய அஸ்வின்.. கும்மாங்குத்து விட்ட உமேஷ் யாதவ்..வீடியோ
பெங்களூரு: பெங்களூரு டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவ், அஸ்வின் ஆகியோரின் அதிரடியால் ஆப்கானிஸ்தான் படு வேகமாக சுருண்டு போனது.
இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 2வது நாளான இன்று 474 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் 2 பேர் சதம் போட்டனர். பாண்ட்யா 71 ரன்களை அதிரடியாக குவித்தார். கடைசி கட்டத்தில் உமேஷ் யாதவ் அதிரடியாக ஆடி 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 26 ரன்கள் குவித்தார்.

அடுத்ததாக ஆட தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி வரிசையாக விக்கெட்களை இழந்து தத்தளிப்புக்குள்ளானது. துவக்க ஆட்டக்காரர்களாக ஷாஷாத் மற்றும் அகமதி களமிறங்கினர். முகமத் ஷாஷாத் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹர்டிக் பாண்டியாவின் அற்புதமான துரோவில் ரன் அவுட் ஆனார். அதன் பிறகு ஆப்கானிஸ்தான் வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்து வெளியிறினார்கள். முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்களை வீழ்த்தினார் .
இந்திய கேப்டன் ரஹானே ஆப்கான் அணிக்கு பாலோ - ஆன் வழங்கினார். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடத்தொடங்கிய ஆப்கான் அணி உமேஷ் யாதவ் பந்துவீச்சில் நிலை குலைந்தது. உமேஷ் யாதவ் சிறப்பாக வீசி அடுத்ததடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் தனது 2வது இன்னிங்ஸில் 103 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா ஒரு இன்னிங்ஸ் 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Story first published: Friday, June 15, 2018, 17:51 [IST]
Other articles published on Jun 15, 2018


Click it and Unblock the Notifications