Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழர்கள்தான் இனி எல்லாம்..இந்திய அணியில் மாஸ் காட்டும் 4 வீரர்கள்..எல்லாத்துக்கும் காரணம் இதுதான்!

சென்னை: இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த 4 மண்ணின் மைந்தர்கள் அதிரடியாக கலக்கி வருகிறார்கள். நான்கு முக்கியமான வீரர்கள் இந்திய அணியில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளனர்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 7வது விக்கெட்டை இழந்துள்ளது.

அஸ்வின் விக்கெட் ஆன நிலையில் பாலோ ஆனை தவிர்க்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணி உள்ளது. இந்திய அணி தற்போது முழுக்க முழுக்க வாஷிங்க்டன் சுந்தரை மட்டுமே இந்திய அணி நம்பி இருக்கிறது.

சுந்தர்

சுந்தர்

இந்திய அணியில் தற்போது வாஷிங்க்டன் சுந்தர் அரைசதம் அடித்து அதிரடியாக களத்தில் ஆடி வருகிறார். ஸ்பின், ஸ்பீட் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு சுந்தர் உறுதியாக களத்தில் நின்று கொண்டு இருக்கிறார். ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக ஆடிய சுந்தர் தற்போது இங்கிலாந்துக்கு எதிராகவும் சிறப்பாக ஆடி வருகிறார்.

பேட்டிங்

பேட்டிங்

இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த 4 மண்ணின் மைந்தர்கள் அதிரடியாக கலக்கி வருகிறார்கள். ஒரு பக்கம் வாஷிங்க்டன் சுந்தர் தன்னை சிறந்த ஆல் ரவுண்டர் என்று நிரூபித்துள்ளார். இன்னொரு பக்கம் அஸ்வின் தன்னை சிறப்பான ஆல் ரவுண்டர் என்று ஒவ்வொரு போட்டியிலும் நிரூபித்து வருகிறார். அதிரடியாக ஒரு பக்கம் பவுலிங் மூலம் 3-4 விக்கெட்டுகளை எடுக்கிறார்.

விக்கெட்

விக்கெட்

இன்னொரு பக்கம் தனது பேட்டிங்கிலும் இக்கட்டான நிலையில் அஸ்வின் உதவி வருகிறார். இவர்கள் இரண்டு பேர் ஒரு பக்கம் கலக்க இன்னொரு பக்கம் தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் சிறப்பாக கலக்கி வருகிறார் . லோ ஓவர் பார்மெட் போட்டிகளில் முக்கியமான வீரராக நடராஜன் உருவெடுத்து இருக்கிறார். இவருக்கு இந்திய டி 20 மற்றும் ஒருநாள் அணியில் நிரந்தர இடம் கிடைக்கும் என்கிறார்கள்.

பேட்ஸ்மேன்

பேட்ஸ்மேன்

நடராஜன் இன்னும் பல வருடங்களுக்கு இந்திய அணியில் முக்கியமான இடதுகை பவுலராக வலம் வருவார் . அதேபோல் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி இந்திய அணியில் விரைவில் அறிமுகம் ஆக உள்ளார் . ஸ்பின் பவுலிங்கில் கலக்கி வரும் இவர் இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் ஸ்பின் பவுலராக களமிறங்க வாய்ப்புள்ளது.

ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல் தொடரில் அதிகம் கவனிக்கப்படும் வீரராக வருண் வலம் வருகிறார். இந்திய அணியில் இவர்கள் 4 பேரும் பெரிய எதிர்காலம் கொண்டவர்கள். இவர்கள் இந்திய அணியிலும், சர்வதேச அளவிலும் கலக்க தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் முக்கிய காரணம். தமிழகம் முழுக்க திறமையான வீரர்கள் பலரை தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம்தான் தேர்வு செய்தது.

தேர்வு செய்தது

தேர்வு செய்தது

திறமையான வீரர்களை தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தேடிக்கண்டுபிடித்து பயிற்சி அளித்து வருகிறது. அதிலும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் மூலம் இவர்கள் புதிய வலிமைபெற்றுள்ளனர். வருண் சக்ரவர்த்தி, நடராஜன் போன்ற வீரர்கள் வெளியுலகிற்கு தெரிய வந்தது இதன் மூலம் டிஎன்பிஎல் மூலம்தான்.

டிஎன்பிஎல்

டிஎன்பிஎல்

இந்திய அணியில் தமிழக வீரர்கள் கலக்க டிஎன்பிஎல் முக்கிய காரணமாக உருவெடுத்துள்ளது. இன்னும் ஷாருக்கான், சாய் கிஷோர், பாபா அபராஜித், ஜெகதீசன் போன்ற வீரர்கள் வெளியுலகிற்கு தெரியாமல் தமிழக அணியில் கலக்கி வருகிறார்கள். தமிழக வீரர்களை இதனால் பிசிசிஐ தற்போது கூர்ந்து கவனிக்க தொடங்கி உள்ளது .

Story first published: Monday, February 8, 2021, 11:19 [IST]
Other articles published on Feb 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+