Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முடியலை! திரிஷாவுக்கு ரசிகர் மன்றம் வைத்த அஸ்வின்.. திரிஷாவை வைத்தே கலாய்த்து கதறவிட்ட மனைவி!

சென்னை : நடிகை திரிஷாவுடன் தான் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு கணவர் அஸ்வினை கலாய்த்துள்ளார் அவரது மனைவி ப்ரீத்தி.

திரிஷாவுக்கு ஒரு காலத்தில் அஸ்வின் ரசிகர் மன்றம் வைத்ததாகவும், இன்றளவிலும் திரிஷா தான் அவருக்கு பிடித்த நடிகை எனவும் கூறப்படுகிறது.

உண்மை தான்

உண்மை தான்

அதனால் தான் அஸ்வினை கிண்டல் செய்து இருக்கிறார் அவரது மனைவி என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அஸ்வின் அவரது பதிவுக்கு கெஞ்சும் வகையில் பதில் அளித்து அது உண்மை தான் என நிரூபித்துள்ளார்.

பிடித்த நடிகை

பிடித்த நடிகை

அஸ்வின் தன் சிறு வயதில் தனக்கு பிடித்த நடிகை திரிஷா தான் என பல முறை பேட்டிகளில் கூட கூறி இருக்கிறார். அது அளவு கடந்ததாக இருந்துள்ளது. இல்லையென்றால் ரசிகர் மன்றம் எல்லாம் வைப்பாரா?

ரசிகர் மன்றம் வைத்தார்

ரசிகர் மன்றம் வைத்தார்

ஆம், தன் இளமை காலத்தில் திரிஷாவிற்கு ரசிகர் மன்றம் எல்லாம் வைத்து அதகளம் செய்து இருக்கிறார் அஸ்வின். தற்போது அஸ்வினுக்கு திருமணம் ஆகிவிட்டாலும் இப்போதும் திரிஷா தான் அவருக்கு பிடித்த நடிகை. அதை தான் கிண்டல் செய்து இருக்கிறார் அவர் மனைவி ப்ரீத்தி.

நிகழ்ச்சியில் சந்திப்பு

நிகழ்ச்சியில் சந்திப்பு

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் திரிஷாவை சந்தித்து இருக்கிறார் ப்ரீத்தி. அஸ்வினுக்கு பிடித்த நடிகை ஆயிற்றே. திரிஷாவை வைத்தே அஸ்வினை கலாய்க்க கிடைத்த இந்த அரிய வாய்ப்பை விடலாமா?

செல்பி புகைப்படம்

திரிஷாவுடன் ஒரு செல்பி எடுத்து அதை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார் ப்ரீத்தி. அத்துடன், "ஸ்வீட் ஆன த்ரிஷா உடன்.. இதோ எடுத்துக் கொள் அஸ்வின்" என அஸ்வினை பப்ளிக் ஆக சீண்டி விட்டார் ப்ரீத்தி.

யம்மா.. முடியலை

அதற்கு பதில் அளித்த அஸ்வின், "இதை என்னால் சமாளிக்க முடியவில்லை.. இதை கொஞ்சம் நிறுத்த முடியுமா ப்ரீத்தி?" என கெஞ்சும் நிலைக்கு சென்றார். ஒரே ஒரு செல்பிக்கே இப்படியா அஸ்வின்?

ரசிகர்கள் கிண்டல்

ரசிகர்கள் கிண்டல்

உங்க கிரஷ் கூட மனைவி இருப்பது மோசமான நிலைமை தான் என ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். சிலர் ப்ரீத்தி வீசிய தூஸ்ராவில் அஸ்வின் கிளீன் பௌல்டு ஆகி விட்டார் என கூறி கிண்டல் செய்துள்ளனர்.

டெஸ்ட் அணியில் அஸ்வின்

டெஸ்ட் அணியில் அஸ்வின்

அஸ்வின் தற்போது இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறார். முதல் டெஸ்டில் அவரும் அணியில் இடம் பெற்றுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், இந்த தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Story first published: Wednesday, October 2, 2019, 18:48 [IST]
Other articles published on Oct 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+